இந்த வார தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாமின் உள்ள ஒரு மாவட்டத்தில் கால்வாயின் குறுக்கே 12 மீ (40 அடி) அளவுகொண்ட '3D' தொழில்நுட்பத்தால் அச்சிடப்பட்ட பாலம் திறந்துவைக்கப்பட்டது.
நவீன வசதி பெருக்கத்தில் 3D அச்சுபொறியின் மூலம் ஒரு பாலத்தையே அச்சுப்பிரதியில் நெதர்லாந்து உருவாக்கியுள்ளது. பல்வேறு கட்ட பரிசோதனைகளின் பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்போது இந்த பாலம் அந்நாட்டின் ராணி மாக்சிமா அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் திறப்பு விழாவில் ராணியுடன் இணைந்து ரோபோ ஒன்றும் கலந்து சிறப்பு செய்திருக்கிறது. அது என்ன என்பதை காணொளியில் காணலாம்.
இந்த பாலம் ஒரு தற்காலிக கட்டமைப்பு எனவும் இரண்டு ஆண்டுகள் தாக்குபிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் முன்பு அந்த இடத்தில் கால்வாயை கடப்பதற்கான பாலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இம்பீரியல் கல்லூரி லண்டன் பரிசோதனையின் ஒரு பகுதியாக, 6-டன் பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன, இதனால் பொறியியல் போஃபின்கள் அன்றாட பயன்பாட்டிற்கு இந்த அமைப்பு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைக் கண்காணிக்க முடியும்.