டோக்கியோவின் மிகப்பெரிய விளம்பர பலகைகளில் ஒன்றிலிருந்து ராட்சத பூனை இப்போது அனைவரையும் குஷி படுத்திவருகிறது.
நம் அன்றாட வாழ்க்கையில் பல கவனச்சிதறல்கள் இருந்தால் தனித்து நிற்பது கடினம், அதுவும் நீங்கள் டோக்கியோ போன்ற சலசலப்பான பெருநகரத்தில் இருந்தால் அது இன்னும் சவாலாக இருக்கும்.
ஆம் ஜப்பான் டோக்கியோ நகரத்தில் உள்ள கட்டிடத்தின் ஒரு விளம்பர பலகை வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்க்கிறது. கண்களைக் கவரும் அந்த விளம்பரத்தில் ஒரு பெரிய பூனையின் உருவம் இடம்பெற்றுள்ளது, அது கீழே உள்ள தெருக்களில் பார்த்துக் கொண்டிருப்பது போலவும், பேசுவதாகவும் அசைவுகளுடன் காட்சி அளிக்கிறது. ஜப்பான் மொழியில் ஹலோ சொல்லி உற்சாகப்படுத்துகிறது.
அந்நகரில் தோன்றியிருக்கும் இப்பூனை 3D தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு உண்மையான பூனை போலவே அதிர்ந்து பார்ப்பது, கொட்டாவி விடுவது, உறங்குவது என சேட்டையாக செயல்படுகிறது; அது ஒரு ராஜ்யத்தின் ஆட்சியாளரைப் போல அப் பிரதேசத்தை அலறவைப்பதாக நேரில் காணும் மக்கள் கூறுகிறார்கள்.
Curved எனும் வளைவு ஒளித்திரையில் கட்சிதமான வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மெய்நிகர் பூனை வசிக்கும் சூழலை நம்பகத்தன்மையாக உருவாக்கியுள்ளனர். அதிக COVID-19 நோய்த்தொற்றுகளுடன் போராடும் ஒரு நகரத்தின் மனநிலையை பிரகாசமாக்குவதே இதன் நோக்கம் என உருவாக்க குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோவில் இந்த மெய்நிகர் பூனையை காலை 7 மணிமுதல் இரவு 1 மணிவரை காட்சிபடுத்துகிறார்கள். அதைத்தவிர இணைய நேரலையிலும் காண்பிக்கப்படுகிறது : நேரலை