சுற்றும் பூமி சுற்றட்டும் எனச் சொல்லிக் கொள்கின்றோம். ஆனாலும் எப்போதாவது அதை நாம் உணர்ந்திருக்கிறோமா எனறால் இல்லையென்பதே பதிலாகும். ஏன் நாம் அதை உணரமுடிவதில்லை?
இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது பூமத்திய ரேகைக்கு அருகே எமது பூமி மணிக்கு 1600 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சுற்றுகின்றது. இந்த சுற்றும் வேகம் ஒருபோதும் அதிகரிப்பதோ அல்லது குறைவதோ இல்லை.
நீங்கள் சீரான ஒரு நேர் பாதையில் சீரான வேகத்தில் ஒரு காரில் பயணிக்கும் போது உண்மையில் நீங்கள் பயணிப்பதாக உணர மாட்டீர்கள். இதே போன்று தான் பூமியின் சுழற்சிக்கும் நீங்கள் அதன் மிகப் பெரிய பருமன் காரணமாக அது சுழல்வதை உணர முடிவதில்லை.
மறுபுறம் பூமி சுழலும் போது அதன் மிக மெதுவான வீச்சம் காரணமாக அது மையத்தில் இருந்து பாரிய விசை (Centrifugal force) எதனையும் வெளிப்படுத்துவதில்லை. இதனால் பூமியின் சுழற்சியால் ஏற்படும் எந்தவொரு நுண்ணிய அதிர்வையும் கூட நாம் உணர முடியாது. இந்த மைய விலக்கு விசை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தால் கூட பூமியின் ஈர்ப்பினால் பிடித்து வைக்கப் பட்டிருக்கும் வளி மண்டலம் மற்றும் கடல் போன்றவை விண்வெளியில் சிதறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் புவி ஈர்ப்பு விசையின் ஆர்முடுகலானது எப்போதும் 9.8 m/s² ஆகும். பூமியின் மைய விலக்கு விசை காரணமாக விண்ணில் ஏதேனும் வீசப்பட வேண்டுமானால் அதன் வேகம் 11.2 Km/s ஆக இருத்தல் வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அப்படி எதுவும் இருப்பதில்லை.
இதனாலும் நாம் புவி சுற்றுவதால் ஏற்படும் விளைவுகளை உணர முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.