உங்கள் ஆண்ட்ராய்ட் 6.0 ஸ்மார்ட் தொலைபேசிகளை கூகிளின் கண்காணிப்பிலிருந்து பாதுகாப்பதில் முக்கியமானது நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் போன்ற விபரங்களை உங்கள் ஸ்மார்ட் தொலைபேசி மூலம் கூகிள் அறிந்திட முயற்சிப்பதை நிறுத்துவதாகும்.
கூகிள் மேப்ஸ் அல்லது ஏனைய நவிகேஷன் அப்ஸை பயன்படுத்த வேண்டுமாயின் தேவையான போது மட்டும் லாக்கேஷன் செட்டிங்கை ஆன் செய்யலாம்.
கூகிள் மேப்ஸ் தவிர்ந்த ஏனைய ஆப்லைன் நவிகேஷன் ஆப்ஸ்கள் நீங்கள் முன்னர் மேப் உதவியுடன் சென்ற இடங்களின் தரவை உங்கள் தொலைபேசியிலேயே பதிவு செய்துகொள்ளும்.எனவே அவற்றை நீங்கள் மட்டுமே அறிவீர்கள்.
ஆனால் இணைய வசதியுடன் இயங்கும் கூகிள் மேப்ஸ் லாக்கேஷன் தரவுகளை வைத்துக்கொண்டு அவற்றை வேறு நோக்கங்களுக்காகவும் நேரடியாகவே பயன்படுத்துகின்றது. இது அவசியமற்றது.
உதாரணமாக கூகிளின் பிரதான தளத்திற்கு செல்லும் போது நீங்கள் இறுதியாக எங்கிருந்தீர்கள் என்ற தகவலை காட்டுவதை கவனித்திருப்பீர்கள். இது போன்று தனது விளம்பர நோக்கத்திற்காகவும் தரவுகளை எடுத்துக்கொள்கின்றது கூகிள்.
இதை எவ்வாறு தடுப்பது? கூகிளிடம் நீங்கள் இருக்கும் இடத்தின் விபரங்கள் தருவதை நிறுத்துவது எப்படி என்பதை கீழுள்ள யூடியூப் வீடியோகாவுள்ள ஸ்மார்ட் தொலைபேசியின் ஸ்கீரின் ரெக்காடிங்கின் மூலம் பார்வையிட்டு இரு நிமிடங்களில் அவற்றைச் செயற்படுத்தலாம்.
முதலில் ஸ்மார்ட் தொலைபேசியில் Setting சென்று Google ஐ தெரிவு செய்யுங்கள் பின்னர் Location அழுத்த வேண்டும். அதின் கீழுள்ள Google Location history tab ஐ தெரிவு செய்து on என்பதன் மேல் டச் செய்ய அது off இற்கு தெரிவாகும்.
மேலும் இதே முறையில் கூகிளின் Search Setting இல் உள்ள saving recent location ஐ யும் நிறுத்திவிடலாம் இதை செய்ய 2வது வீடியோவை பாருங்கள்.
இதே போன்று பயனுள்ள மேலும் சில வீடியோக்கள்.
இதோபோன்று மற்றுமொரு பதிவு