அது என்ன விதியோ அதிஷ்டமோ! முனைவர் பட்ட மாணவர்கள் இருவர் கணனி அறிவியில் துறைப் பல்கலைகழக திட்டத்தில் சந்தித்துக்கொள்கின்றனர்.
தங்களுக்குள் இருக்கும் ஓரே நோக்கத்தை இருவரும் விரைவிலே அறிகின்றனர். உடனே உலகளாவிய வலையை மேலும் சிறப்பாக அணுகக்கூடிய நிலைக்கு உயர்த்துவதில் தொடர்பில் ஆராய்ச்சியில் இறங்குகின்றனர். சிறந்த தேடும் பொறியை உருவாக்கும் அர்த்தமுள்ள தேற்றத்தில் களமிரங்கிய இருவரும் இறுதியில் 1998 ஆம் ஆண்டு செப் 27ஆம் திகதி உத்தியோகபூர்வமான வெற்றியை காண்கிறார்கள்.
அவர்கள் Stanford பல்கலைகழகத்தின் Sergey Brin மற்றும் Larry Page ஆகிய மாணவர்களே ஆவர். அவர்கள் உருவாக்கி வெற்றி கண்டது ' கூகுள்' எனும் தேடு பொறியே ஆகும்.
1998ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்திவந்தாலும் அதன் நோக்கம் ஒன்றுதான் என தனது 25வது வயதை கொண்டாடும் கூகுள் அறிவித்துள்ளது. உலகத் தகவலை ஒழுங்கமைத்து, அதை உலகளவில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றி உலகம் முழுவதிலுமிருந்து பில்லியன் கணக்கான மக்கள் தேட, இணைக்க, வேலை செய்ய, விளையாட மற்றும் பலவற்றிற்கு Google ஐப் பயன்படுத்துவது அறிந்ததே.
மேலும் எங்களை முன்னோக்கி நகர்த்திய கேள்விகளுக்கு எங்கள் பயனர்களுக்கு நன்றி எனவும் தனது பிறந்தநாளில் கூறிப்பிட்டுள்ளதுடன், வழமை போல தனது கூகுள் டூடுலை கடந்து வந்த லோகோக்களை கொண்டு வடிவமைத்துள்ளது.