இயற்கை மருத்துவ துறையில் துளசிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. காயகற்ப மூலிகையான துளசி உடலினை நோயணுகாது பாதுகாப்பதுடன் ஆயுளையும் கூட்டும் ஓர் அதிசய மூலிகை. துளசியின் சிறப்புகள் பற்றி மேலும் பார்க்கலாம்.
குடும்ப பெயர்- Labiatae, Lamiaceae
ஆங்கிலப் பெயர்- Holy Basil, Sacred Basil
சிங்கள பெயர்- Thulasi
சமஸ்கிருத பெயர்- Tulasi, Surasa, Manjarikaa, Graamya
வேறு பெயர்கள்-
அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருந்தம், துழாய்
பயன்படும் பகுதி-
இலை, விதை
சுவை- கார்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு
வேதியியல் சத்துக்கள்-
Eugenol, carvacrol, nerol, eugenolmethylether, ursolic acid, apigenin, luteolin, orientin, molludistin
மருத்துவ செய்கைகள்-
Leaf -இலை
Antiasthmatic- ஆஸ்துமா எதிரியாக்கி
Antiperiodic- முறைச்சுரம் அகற்றி
Antipyretic- சுரமகற்றி
Antirheumatic - வாதமகற்றி
Antispasmodic -இசிவகற்றி
Carminative - அகட்டுவாய்வகற்றி
Diaphoretic- வியர்வை பெருக்கி
Expectorant- கோழையகற்றி
Hepatoprotective -ஈரல் தேற்றி
Stimulant- வெப்பமுண்டாக்கி
Stomachic- பசித்தீ தூண்டி
Seeds-விதை
Demulcent - உள்ளழலாற்றி
Root - வேர்
Antimalarial -மலேரியா எதிர்ப்பி
Plant -தாவரம்
Antistress- மனவழுத்த அகற்றி
Essential oil - நறுமண எண்ணெய்
Antibacterial- பற்றீரியா எதிரியாக்கி
Antifungal- பங்கசு எதிரியாக்கி
தீரும் நோய்கள்-
மார்புச்சளி, வலி, விடம், சந்நிபாதசுரம், இருமல், மாந்தம் ,கணைச்சூடு, பிரமேகம் ,உடல்சூடு, வெட்டுக்காயம், விஷக்காய்ச்சல்(மலேரியா) ,தோல் வியாதி, சிறுநீரக கோளாறு, தொழுநோய், நரம்புத் தளர்ச்சி, கல்லீரல் வீக்கம், இருதயவலி
பயன்படுத்தும் முறைகள்-
வெறும் வயிற்றில், காலையில் சிறிது துளசியைச் சாப்பிட சளி, இருமல் நீங்கும்.
இதனை ஒரு பிடி அளவு எடுத்துச் சுத்தம் செய்து ஒரு டம்ளர் நீரில் சேர்த்துச் சூடாக்கவும். இதனுடன் நான்கு மிளகினைத் தூளாக்கிச் சேர்த்துக் கொதிக்க விட்டுப் பின் இறக்கி விடவும். இதனுடன் 3 அல்லது 4 சொட்டுத் தேன் விட்டு ஆறிய பின், மூன்று வேளை சாப்பிடச் சளி, இருமல், நுரையீரல் நோய், காய்ச்சல், தலைவலி ஆகியவை நீங்கும்.
குழந்தைகளின் அஜீரணக் குறைபாடுகளை போக்கவும், மார்பு சளியால் மூச்சு விட சிரமப்படும்போதும் இதன் சாற்றை பசுவின் பால் அல்லது தாய்ப்பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.
துளசி கஷாயம்
ஒரு கைப்பிடி துளசி இலையை பறித்து வந்து தண்ணீரில் சுத்தம் செய்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அரை டம்ளர் ஆகுமாறு நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக காலை ஒரு வேளை உட் கொள்ளலாம். உடல் நலமுள்ளவர்கள் நான்கு நாட்களுக்கு ஒரு முறை யும், நோயாளிகள் தின மும் நோய் தீரும் வரை உட்கொள்ள வேண்டும்.
ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு கைப்பிடி அளவு துளசி போட்டு இரவு முழு வதும் ஊற வைத்து காலையில் உணவுக்கு முன் உட்கொண்டாலும் நல்ல பலன் தெரியும்.
இதன் இலையைப் பாலிலிட்டுக் காய்ச்சியுண்ணப் பாலிலுண் டான குற்றங்கள் விலகும்.
உலர்த்திப் பொடித்து சாப்பிட சளியை சேர்க்காமல் தடுக்கும்.
புட்டவியல் செய்து சாறெடுத்து, சிறிது கோரோசனை கூட்டிச் சிறுகுழந்தைகளுக்குப் புகட்ட, இருமல் தீரும். கபக்கட்டு, மாந்தம், கணச்சூடு தணியும்.
தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி வேதுபிடித்தாலும், ஸ்நானஞ் செய்தாலும் கபதோடம் நீங்கும்.
விதையைக் குளிர்ந்த நீரிலரைத்துப் பிரசவத்திற்குப்பின்னான வேதனைக்கும், அன்றிப் பொடியிருமல், பிரமேகம், வெப்பம் இவைகளுக்கும் கொடுக்கக் குணமுண்டாகும்.
துளசி செடி அதிக அளவில் வளரும் காற்றில் இருக்கும் புகை, கிருமிகள் போன்ற தேவையற்ற பொருள்கள் அழிந்து காற்று மண்டலம் சுத்தம் அடையவும் உதவுகின்றது.
#சூர்யநிலா
#SuryaNila