free website hit counter

மூலிகை அறிவோம் - காதல் மலர் "ரோஜா"

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
காதலின் அடையாளமாகவும் மலர்களுக்கெல்லாம் ராணியாகவும் திகழும் ரோஜாவின் மருத்துவ குணங்களை இவ் வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
தாவரவியல் பெயர்- Rosa gallica / Rosa rubra
குடும்ப பெயர்- Rosaceae
ஆங்கிலப் பெயர்- French Rose
சிங்கள பெயர்- ரோச மல்
சமஸ்கிருத பெயர்- Gulaab, Rakta_Taruni
வேறு பெயர்கள்-
பன்னீர்ப்பூ, குலாப்பூ, சிற்றாமரை

பயன்படும் பகுதி-
பூ

சுவை- இனிப்பு, துவர்ப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு

வேதியியல் சத்துக்கள்-
essential oil
geraniol
citronellol
citral
nerol 5-1-10
phenyl ethyl alcohol 3-9
euginol 1
esters 3-5
phenyl acetic acid traces
stearoptene
farnesol
l- linalool
fatty oil
tannin
cyanin
Cyanidin
quercitrin
carotene
Vitamin C

மருத்துவ செய்கைகள்-
Astringent- துவர்ப்பி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Refrigerant- குளிர்ச்சியுண்டாக்கி
Tonic- உடலுரமாக்கி

தீரும் நோய்கள்
- மலபந்தம், சுரம், தாகம், ஓக்காளம், ஆசன எரிச்சல், இரத்தப் பிரமேகம், வயிற்றிசிவு, சுகசந்நி, சந்நிபாதம், திரிதோஷம்

குறிப்பு:- இளஞ்சிவப்பு நிற மலர்களே மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

பயன்படுத்தும் முறைகள்
பூவிதழ்களைக் கொண்டு பன்னீர், வெந்நீர் ஊறல் கஷாயம், மணப்பாகு, குல்கந்து, அத்தர் முதலியவைகளை செய்து உபயோகிக்கலாம்.

பன்னீர் :-
பூவிதழ்கள் 1680 g, நீர் மூன்று லீற்றர் இட்டு கொதிக்கக் காய்ச்சி நீராவியைப் பெற்றுக் கொள்ளவும். இதை சந்தனங்களோடு வாசனைக்காகவும், களிம்பு(ointment), கிலோதம்(lotion) முதலியவைகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

சிவப்பு பூவிதழ்கள் 8 கிராம், வெந்நீர் 350 மில்லி லிட்டர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும். இக் கஷாயத்துடன் உப்பு, பேதி மருந்துகளையும், கசப்பு மருந்துகளையும் சேர்த்துக் கொடுக்க வெகுட்டல் இருக்காது. சுரம், தாகம், ஓக்காளம் இவை நீங்கும்.

உலர்ந்த பூவிதழ்கள் 160 கிராம் எடுத்து 1400 மில்லி லிட்டர் வெந்நீரில் இட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, அதில் 700 g சர்க்கரை சேர்த்து காய்ச்சி பாகு பதத்தில் இறக்கி வடிகட்டி கொண்டு,50 மில்லி லிட்டர் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். இதை மலபந்தம், உஷ்ணம் இவைகளுக்கு 20-30 ml வீதம் நீரில் கலந்து கொடுக்கலாம். இரத்தபிரமேகம், வயிற்று வலி நீங்கும்.

சிவப்பு பூவின் பச்சை இதழ்கள்(raw petals) 700 g, கற்கண்டுத்தூள் 2100 g, பூவிதழ்களை கல்லுரலிலிட்டு இடித்து, கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும், இது மிகவும் இனிப்பானது. மலத்தை இளக்கித் தள்ளும். ஆசன எரிச்சலை நீக்கும்.

பன்னீர் 250 ml, மீன்கொழுப்பு 50 g, வாதுமை எண்ணெய் 315 ml, ரோசாப்பூ எண்ணெய் 10 துளி இவைகளை நன்றாக கலந்து வைத்துக்கொண்டு காயங்களை ஆற்ற மேலுக்கு பூசலாம். நறுமணமாக இருக்கும்.

பூக்களில் இருந்து ஒருவகை நறுமணம் பொருந்திய எண்ணெய் எடுப்பதுண்டு; இதனை அத்தர் என்பர்.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula