ஒவ்வொரு ஆண்டும் வருகின்ற மே 17ஆம் திகதி உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு வாழ்வியல் நோயாக கருதப்படுகிறது. இது உலகளவில் 30% க்கும் அதிகமான வயது முதிந்தோரை பாதிக்கிறது. உலகெங்கிலும் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய் காலப்பகுதியிலும் அதிகம் பாதிக்கிறது. ஆரோக்கியமற்ற உணவு முறைகளை கையாளுவது, லாக்டவுன் மத்தியில் மன அழுத்தத்தை அதிகரித்தல் ஆகியன இந்நோயிற்கான காரணிகளாக பார்க்கப்படுகிறது. அதை சாதாரண வரம்பிற்குள் பராமரிப்பது முக்கியம்.
இந்நிலையில் ‘உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், அதைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழலாம்’ என அடிக்கடி கேட்பதற்கு பதிலாக, இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும் உயர் இரத்த அழுத்தத்தை வெல்லவும் உதவும் 3 எளிய யோகா பயிற்சிகள் உங்கள் வீட்டிலே செய்யக்கூடியவாக தரப்பட்டுள்ளன.
ஆகவே இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும், உயர் இரத்த அழுத்தத்தை வெல்லவும் உதவும் வீட்டில் செய்யக்கூடிய 3 எளிய யோகா பயிற்சிகள் இங்கே:
1. ஷவாசனா
செய்முறை : உங்கள் கால்கள் நேராகவும், கைகள் தளர்வாகவும் தரையில் பாய் அல்லது விரிப்பின் மேல் படுத்துக் கொள்ளுங்கள். கால்களை ஒரு இயற்கையான நிலையில் ஒதுக்கி வைத்துக் கொண்டு மெதுவாக கண்களை மூடிக்கொண்டு, கைகளை உடலுடன் நேராக வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் உள்ளங்கைகளை உடற்பகுதியிலிருந்து விலக்கி வையுங்கள். இயற்கையாக சுவாசிக்கவும், உங்கள் உடல் தரையில் கனமாக உணர அனுமதிக்கவும், கவனத்தை உங்கள் கால்விரல்களில் கவனம் செலுத்தவும். பின்னர் உங்கள் கவனத்தை மாற்றி, உடல், உறுப்பு மற்றும் உயிரணுவின் ஒவ்வொரு பகுதியையும் கவனியுங்கள்;
மனதை ஒரு நிலைப்படுத்தி நிதானமாக சுவாசிக்கவும். கண்களை மூடி இயற்கை ஒலிகள் மீது கவனம் செலுத்தி (நித்திரை கொள்ளாது) கைகளையும் கால்களை மெதுவாக அசைத்துக்கொள்ளவும். பின் மெதுவாக பக்கவாட்ட திரும்பி சற்று இருந்துவிட்டு கண்களை திறந்து எழுந்துகொள்ளவும்.
பலன் : உடனடியாக இது உடல் வெப்பநிலையை குறைத்து மன இறுக்கத்தை தளர்த்துகிறது . உடல் செல்களை சீர் செய்வதோடு கர்ப்பிணிப் பெண்களுக்கு மாத்திரைகள் இல்லாமல் சுய சிகிச்சைமுறைக்கு உதவுகிறது.
2. பிராணயம் அல்லது நாசி சுவாசம்
செய்முறை : தரையில் குறுக்கே கால்களை மடக்கி அமர்ந்து தொடங்கவும். உங்கள் முழங்கால்களில் கைகளை வைத்து கொண்டு கண்களை மூடுங்கள். உங்கள் வலது கட்டைவிரலை உங்கள் வலது நாசியில் வைத்து இடது நாசியிலிருந்து 4 எண்ணிக்கையில் ஆழமாக உள்ளிழுக்கவும்.இப்போது உங்கள் இடது மூக்கை உங்கள் வலது மோதிர விரலால் மூடி 2 விநாடிகள் வைத்திருங்கள். இந்த கட்டத்தில், உங்கள் மூக்கு இரண்டும் மூடப்பட்டிருப்பதால் மூச்சை பிடித்துவைத்திருங்கள். பின் வலது மூக்கிலிருந்து உங்கள் வலது கட்டைவிரலை விலக்கி வலது நாசி வழியாக ஆழமாக சுவாசிக்கவும். வலது நாசியிலிருந்து 4 எண்ணிக்கையில் உள்ளிழுக்கவும், உங்கள் மோதிர விரலை உங்கள் இடது நாசியில் தொடர்ந்து வைத்திருக்கவும், பின்னர், இரண்டு நாசியையும் 2 விநாடிகள் மூடி, உங்கள் இடது நாசியால் ஆழமாக சுவாசிக்கவும். இந்த செயல்முறையை 5 நிமிடங்கள் செய்யவும். அதைச் செய்யும்போது உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
பலன் : இந்த சுவாச நுட்பம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி நினை ஆற்றலை அதிகரித்தல், சுவாச மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த யோகா ஆசனம் தூக்கத்தை மேம்படுத்துவது குறிப்பிடதக்கது.
3. புஜங்க ஆசனம்
செய்முறை : தட்டையாக படுத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கைகளை மார்பின் பக்கமாக வைத்து, கைகள் உடலுக்கு நெருக்கமாக, முழங்கைகள் வெளிப்புறமாக வைத்து மூச்சை உள் இழுத்தபடி நெற்றி, கழுத்து மற்றும் தோள்களை உயர்த்தவும்.உங்கள் கைகளின் வலிமையைப் பயன்படுத்தி உடற்பகுதியை உயர்த்தவும். சாதாரணமாக சுவாசிக்கும்போது மேல்நோக்கி பாருங்கள். உங்கள் வயிறு தரையில் அழுத்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 5 விநாடிகள்தொடர்ந்து வைத்திருந்து பின் மெதுவாக வயிற்றில் தட்டையாக படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலையை ஒரு பக்கமாகத் திருப்பி, கைகளை உடலின் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
பலன் : இந்த ஆசனமானது முதுகெலும்பு, தசைகள், மார்பு, வயிறு, தோள்கள், நுரையீரலை வலுப்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஒருவரின் உடலில் உள்ள அதிக அழுத்தத்தையும் குறைக்கிறது.
Source : hindustantimes