தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சவக்காரத்தை உருவாக்கி அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியான சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஹேமன் பெக்கலே, தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க சவக்காரத்தை கண்டுபிடித்ததால், "அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானி" என்று பெயரிடப்பட்டார்.
அமெரிக்காவின் சிறந்த நடுநிலைப் பள்ளி அறிவியல் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் 3எம் மற்றும் டிஸ்கவரி எஜுகேஷன் ஆகியவற்றின் மதிப்புமிக்க விருதை 14 வயது மாணவரான ஹேமன் பெக்கலே வென்றார்.
விருதை பெற்றுக்கொண்ட ஹேமன் கருத்து தெரிவிக்கையில் "இளம் மனங்கள் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று கூறினார். "எனக்கு உயிரியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எப்போதும் ஆர்வம் உண்டு, இந்த சவால் எனது கருத்துக்களை வெளிப்படுத்த சரியான தளத்தை எனக்கு அளித்தது," என மேலும் கூறினார்.
மெலனோமா எனும் தோல் புற்றுநோய் சிகிச்சைக்காக கலவை அடிப்படையிலான சவக்காரத்தை ஹேமன் உருவாக்கியுள்ளதுடன் இதனை தயாரிக்க சுமார் 50 டாலர் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.