சுமார் 1.3 மில்லியன் வருடங்கள் பழமையான மனித எச்சங்கள் அல்லது சுவடுகள் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இது வரலாற்றில் பண்டைய மனித இனத்தின் இடப்பெயர்வு குறித்த பதிவுகளில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரலாம் எனக் கருதப் படுகின்றது. ஸ்பெயினின் ஆர்க்கே (Orce) எனும் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட இந்த மனித சுவடுகள் மூலம் 1.3 மில்லியன் வருடங்களுக்கு முன்பதாக ஜிப்ரால்டர் நீரிணை வழியாக முதன் முறை ஐரோப்பாவுக்கு ஆரம்ப மனிதர்கள் வந்தார்கள் என்ற மும்மொழிவு வலுப் படுத்தப் பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பானது Paleomagnetism மற்றும் விலங்கின Faunal comparison போன்ற ஆய்வுகளின் மூலம் நிகழ்த்தப் பட்டுள்ளது. மேலும் இது முன்பு நிலவிய ஆசியா வழியாகத் தான் ஐரோப்பாவுக்கு மனிதர்கள் ஆதியில் வந்தார்கள் என்ற பாரம்பரிய கருதுகோளுக்கும் முக்கிய சவாலை விடுத்துள்ளது. இது ஆசியாவில் இருந்து மத்திய தரைக் கடல் மூலமாகத் தான் ஆதியில் ஐரோப்பாவுக்கும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கும் மக்கள் வந்திருப்பார்கள் என்பதைக் கேள்விக்குறியாக்கி உள்ளதுடன், பொது மக்கள் இடம்பெயர்வில் ஜிப்ரால்டர் நீரிணைக்கு அதி முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளது.
இது இந்த ஆர்க்கே பகுதியில் புவியியல் ரீதியாக நடத்தப் பட்ட ஆய்வின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. இது தவிர ஆப்பிரிக்காவில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்த முதல் மனித இனம் எவ்வாறு ஐரோப்பாவுக்கு வந்திருக்க முடியும் என்ற ஊகத்துக்கும் பதில் கிடைத்துள்ளது. ஜிப்ரால்டர் நீரிணை ஐரோப்பியக் கண்டத்தின் கிழக்கே அத்திலாந்திக் கடலில் ஸ்பெயினுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே மத்திய தரைக் கடலை இணைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சுவடுகள் கண்டு பிடிக்கப் பட்ட ஆர்க்கே தொல்பொருள் இடத்தில் இதுவரை 5 மனிதர்களது உடற் பாகங்கள் 1982 ஆமாண்டிலிருந்து கிடைத்துள்ளன.
தகவல் - SciTechDaily