அசாதாரண சூழ்நிலையில் உலகம் இருப்பதால் கூகுளும் தன் பங்கிற்கு தனது பழைய கூகுள் டூடுள் விளையாட்டுக்களை முகப்புபக்கத்தில் மீள் பதிவிட்டு வருகிறது.
அவ்வகையில் இன்று கூகுலில் இருக்கும் இரண்டாவது எழுத்தான O எதையோ வாயில் போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த (O) ஐ பார்த்தால் "கொரானா" வைரஸ் மாதிரி தெரிந்தாலும் அதைக் கிளிக் செய்யத்தான் தெரிந்தது அது மிளகாய்கள் சாப்பிடும் விளையாட்டு என்றும் மிளகாய்களின் காரத்தை அளவிட்ட வில்பர் ஸ்கோவில் என்பவரின் ஒரு வரலாறு இருக்கிறது என்றும் தெரிய வந்தது.
1865, ஆண்டு ஜனவரி 22ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரிட்ஜ்போர்ட் எனும் வரலாற்று துறைமுகநகரத்தில் பிறந்தார் வில்பர் லிங்கன் ஸ்கோவில் (Wilbur Lincoln Scoville).
இவர்; வேதியியலாளர், விருது பெற்ற ஆராய்ச்சியாளர், மருந்தியல் பேராசிரியர் மற்றும் அமெரிக்க மருந்துக் கழகத்தின் இரண்டாவது துணைத் தலைவர் என பல பதவிகளை வகித்துவந்துள்ளார்.
கொலம்பஸ் அமெரிக்காவை அடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மிளகாய்கள் சாப்பிட்டால் நாக்கு எரியும், கண்ணீரைத்தூண்டும் போன்ற குணங்களைப்பற்றி மக்கள் அறிந்திருந்தார்களாம்; ஆனால் வில்பர் ஸ்கோவிலுக்கு முன் யாருக்குமே மிளகாய்களின் காரத்தை எவ்வாறு அளவிட வேண்டும் என்பதுப்பற்றி தெரியாதாம். ஆகவேதான் கூகுள் டூடுள் குழு; ஸ்கோவிலின் பணி மற்றும் அவரது பெயரிடப்பட்ட "ஸ்கோவில் அளவுகோல்" வளர்ச்சி ஆகியவை சில அங்கீகாரங்களுக்கு தகுதியானவை என்று நினைத்தது.
வில்பர் ஸ்கோவில் The Art of Compounding எனும் தனது நூலில் மிளகுக்காரத்திற்கு (வெப்பத்திற்கு) பால் ஒரு மாற்று மருந்தாக உட்கொள்ளப்படுகிறது என ஆரம்ப குறிப்புக்களாக தெரிவித்திருக்கிறாராம்.
அதெல்லாம் சரி எப்படிதான் மிளகாய்களின் காரத்தை அளந்தார் என்கிறீர்களா?! வில்பர் ஸ்கோவில் அவரது உயிரியல் ரீதியான சோதனைக்கு (organoleptic test) பெயர்போனவர். அதாவது மிளகாய்களின் காரத்தை அளவிட மனிதர்களையே பயன்படுத்தியுள்ளாராம். (அந்த விளையாட்டில் காட்டியிருப்பதுபோல் ஒவ்வொரு மிளகாய் சோதனைக்குப் பின் ஐஸ்கீரிம்கள் சாப்பிட்டு இருப்பார்களோ?!)
வாட்ஸ் அப்பில் மெசேஸ் அனுப்புகிறது ஒட்டகம் : புதிய கதை சொல்லி நேகா !
இதன் அடிப்படையிலே மிளகாய் சாப்பிட்டு காரத்தை அளவிடும் போட்டியை உருவாக்கியிருக்கிறது கூகுள் டூடுள் குழு. விளையாடும்போது கூடவே என்ன வகையான மிளகாய்கள் அதற்கான கார அளவீடுகளையும் தரவுகளாக தந்துள்ளார்கள்.
The Art of Compounding எனும் நூல் மாணவர்களுக்கான உரை புத்தகமாகவும் (ஆய்வு அறிக்கை நூல்) மற்றும் மருந்தாளுநர்களுக்கான மருந்தின் முறைகளை குறிக்கும் புத்தகமாகவும் இருந்துவருகிறது