இரண்டு தசாப்த கால கட்டுமானத்திற்குப் பிறகு தன் ஒற்றை நாகரிகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் எகிப்து நாட்டில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.
எகிப்து நாடு அதன் தனித்துவமான கலை நாகரிக வரலாற்றுக்கு பெயர்போனது. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் பிரமிட்ஸ் மற்றும் அதன் தொடர்பாக காணப்படும் அழகியல் வரலாற்று சான்றுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் எகிப்து நாடு தனது தனித்துவமான பண்டைய நாகரிக அற்புதங்களை உலக மக்கள் பார்வைக்கு கொண்டுவந்துள்ளது. அதன் தொடர்பாக தற்போது எகிப்தின் தொல்லியியல் கலைப் பொருட்கள் அடங்கிய பிரமாண்ட அருங்காட்சியகம் ஒன்றை எகிப்தின் கெய்ரோ நகரில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது,

பிரம்மாண்டமாக நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் உலகத் தலைவர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் சீனாவின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் சன் யெலி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசி வரவேற்றார்.
எகிப்திய ஜனாதிபதி அடையாளமாக விளக்குகளை ஏற்றி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தவுடன், உலகம் முழுவதும் வியக்கத்தக்க ஒரு அற்புதமான கொண்டாட்டத்தைத் தொடங்கியது.
பல நாடுகளைச் சேர்ந்த எகிப்திய மற்றும் சர்வதேச இசைக்குழுக்களின் மெய்நிகர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன, அதில் புகழ்பெற்ற ஓபரா பாடகர்கள், வயலின் கலைஞர்கள் மற்றும் பல்வேறு எகிப்திய நாட்டுப்புறக் கதைகளின் நேரடி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இது கலாச்சாரத்தால் உலகளவில் நாடுகளை ஒன்றிணைக்க முடியும் என்பதை உணர்த்தின.

இந்நிகழ்வுகள் கிசாவின் பெரிய பிரமிடுகளின் பின்னணியில் நடைபெற்றதுடன் இந்த ஆடம்பரமான விழா, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தின் நீண்ட வரலாற்றை மையமாகக் கொண்டு, பங்கேற்பாளர்களை காலத்திற்கு முந்தைய பயணத்திற்கு அழைத்துச் சென்றது. காலத்தால் அழியாத பண்டைய எகிப்திய நினைவுச்சின்னங்கள் முதல் இஸ்லாமிய மற்றும் காப்டிக் சகாப்தங்கள் வரை, பின்னர் நவீன மற்றும் எதிர்கால எகிப்துடன் நிறைவடைந்தது.
20 வருடங்களுக்கு முன் 2005 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. $1.2 பில்லியனுக்கும் அதிகமான செலவில், 500,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்த பரந்த வளாகம், 7,000 ஆண்டுகால எகிப்திய வரலாற்றை உள்ளடக்கியது குறிப்பிடதக்கது.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைக் கொண்ட கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம், ஒரு நாகரிகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகும். இதில் இதுவரை கண்டிராத மன்னர் Tut Ankamen இன் புகழ்பெற்ற பொக்கிஷங்களின் முழுமையான தொகுப்பும், சமீபத்திய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்ட மாயாஜால சூரிய சக்தி படகுகளும் அடங்கும்.
Source : CGTN
																						
     
     
    