ஆற்றுகையின் அரங்கு இருளாகத்தான் இருந்தது நான் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு சென்று இறங்கியபோது!
அப்பிரதேச மின்சாரம் நிறுத்தும் அட்டவணைக் 'காலம்'! ஆனாலும் நிச்சயமாக ஒளியில்தான் ஆற்றுகை மின்ன வேண்டும் என்பதற்கு அவசியமிருக்கவில்லை. ஒளியில்லாமலும் அன்று நடந்த ஆற்றுகை ஆயிரம் சூரிய பொன்கதிர்களை பரப்பி வீசி கூசிட்டது எனலாம். இலங்கையின் வடமாகணத்தை அடிப்படையாக கொண்ட நாடக ஆற்றுகை குழு ஒருகமைத்திருந்த சுமார் ஒரு மணி நேர குரு நாடகங்களின் அணிவகுப்புக்கள் அனைத்தும் புதிய பாதையை திறக்கும் உற்சாகத்தை அளித்தது.
மாலை மழைக்கூதலிலும் தந்தையின் துணையோடு அரங்குக்கு புறப்பட்டேன்., வீட்டிலோ அன்னை இதுபற்றி உனக்கு ஏதும் விளங்காது; ஏனனில் அவர்களின் படைப்பு இன்றைய 'தினம்' வேறமாதிரி இருக்கலாம் என்றார். அது எந்த மாதிரியோ நான் போய் வருகிறேன் என்றேன்.
ஆரம்ப ஆற்றுகையே வீட்டுப்பெண்களின் தகுதி/ தனித்திறமையை எடுத்துக்காட்டும் உணர்வுப்பூர்வமாக அமைத்திருந்தார்கள். அம்மாவை நினைத்துக்கொண்டேன். அடுத்ததாக போதை பழக்கம் செய்யும் மாயை குறித்து புலம்பப்பட்டது. அத்தோடு நாவல் பழங்களை வறுமையின் நிமித்தம் சாலோயோரம் விற்கும் பள்ளிக்குழந்தையின் விம்மலை காண்பித்தார்கள். அதுமட்டுமா உலகை சுருக்கிவைத்திருக்கும் கைப்பேசி பேய்த்தனமாக ஆட்டுவிக்கும் ஆபத்தை பேய் போலவே; முழு இருட்டில் மேடையில் அங்கங்கு கைப்பேசி திரை வெளிச்சத்தில் தோன்றி மறைந்த கலைஞரை மறக்கமுடியவில்லை.
நம்நாட்டின் யானைக் கதைகளை எப்படி விட்டுவைக்கமுடியும் அதையும் நிழற்பாவை அரங்கு மூலமாக ஆடல் பாடலாக நிகழ்த்தினர். எனதுரு'நோய்' பிரிந்துசென்ற பிள்ளைகளை கண்டுவிட்டால் கரைந்துவிடும் என வயதில் சிறியபிள்ளை முதியவர் வேடம் கட்டிக் காட்டினார்.
இறுதியாக அரை மணிநேர சாப்பாட்டு வேளை மேசையில் எப்படி ஒரு பதின்ம வயதுபெண்ணின் எதிர்காலம் கைகழுவப்படுகிறது என சமூக மாற்றக் கதைகளை அரங்கேற்றி பலத்த கரகோஷங்களை எழுப்பி வாழ்த்திய மக்களுக்கு முன் விடைபெற்றார்கள்.
வாழ்வியல் மாறுதல்களின் புதிய பாதையில் ஆற்றுகையின் அனுபவத்தையும் ஏற்றிச்சுமந்தபடி வீட்டுக்கு பயணித்தேன் நான்.
மேலும் தெரிந்துகொள்ள : முகநூல்