தொடக்க காலத் தமிழ் சினிமாவில் நாடகங்களைத் தழுவி
அதிக திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது கூட ‘விநோதயச் சித்தம்’ என்ற நாடகம் படமானது. இது பெரிய அளவில் இல்லை. ஆனால், நாவலையும் சிறுகதைகளையும் தழுவி திரைப்படங்களை உருவாக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. அதை பெரிய அளவில் முன்னெடுத்து செல்லும் இயக்குநராக வெற்றிமாறன் உள்ளார். தற்போது அவர் சு.சமுத்திரத்தின் ‘வாடிவாசல்’ என்ற நாவலை படமாக்கி வருகிறார்.
இதுவொருபுறம் இருக்க வெற்றிமாறன் போன்றவர்களை பின்பற்றி புதிய இயக்குநர்களும் நாவல் மற்றும் சிறுகதைகளை படமாக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ‘ஊருக்குள் ஒரு புரட்சி’, ‘வேரில் பழுத்த பலா’, ‘வாடமல்லி’ போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்த எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே நாவலை தழுவி புதிய திரைப்படம் உருவாகிறது. நாவலின் மையப் பெண் கதாபாத்திரத்தின் பெயரான ‘உலகம்மை’யின் பெயரே படத்துக்கும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இக்கதையைக் கேட்ட இளையராஜா இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். ‘காதல் எஃப் எம்', 'குச்சி ஐஸ்' உள்ளிட்டப் படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘96’, ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தற்போது மழைப் பின்னணி அமைந்த காட்சிகள் அசலான கணமழையிலேயே படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக முழு ஒத்துழைப்பை கௌரி கிஷன் கொடுத்துள்ளார் என படக்குழுவினர் தெரிவிகின்றனர்.