பஜனைப்பாடலாகவே கேட்டுக்கொண்டிருந்த பாபநாசம் சிவனின் " என் அப்பன் அல்லவா..." பாடலையும், திருவாசக வரிகளையும், பாடித் துதிக்கும் பக்தனாக செல்வராகவன் திரையில் அறிமுகமாகும் போதே, அந்தக் கதாபாத்திரத்தின் அழுத்தமும், வைராக்கியமும் பார்வையாளனிடம் தொற்றி விடுகிறது.
பீமன் வேசம் கட்டும் கூத்துக் கலைஞன் பீமராசாவாக அவர் ஆட்டம் போடுகையில், செல்வராகவன் எனும் இயக்குனர் செல்வராகவன் தேர்ந்த நடிகனாகத் திரையில் விரியத் தொடங்குகின்றான். 'சாணிக் காகிதம்' திரைப்படத்தின் பின்னதாக செல்வராகவன் திரையில் மிரட்டியிருக்கும் திரைப்படம் 'பகாசுரன்'. .
செல்வராகவனைப் போலவே படம் முழுவதும் தனித்து, யார் இவன்? எனக் கேட்கவும் வைக்கிறது சாம் சி.எஸ். ன் இசை. பாடல்களைத் தாண்டி, பின்னணி இசைக் கோர்ப்பில் மேலும் மிரட்டுகின்றார். PVR Palazzo அரங்கின் 7.1 ஆடியோ சிஸ்டத்தில், பழமை வாத்தியங்கள் பலவும் காட்சிகளில் தெரிவதோடு மட்டுமல்லாது இசையிலும் அதிர்கிறது. சமகால சமூக வாழ்க்கையில் அக்கறை கொள்ள வேண்டிய சமூகப் பிரச்சனை ஒன்றின் திரைக்கதை "பகாசுரன்"
"பகாசுரன்" தொழில்நுட்பமா ? பாவனையாளரா ?