அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் ஜனவரி 12ல் வெளியாகிறது
இந்த படம் குறித்து இயக்குனர் வினோத் முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு பைக் ரேஸ் ஒருவருக்கு போலீஸ் துறையில் வேலை கொடுத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதையும் பத்திரிக்கையில் படித்த சில சம்பவங்களையும் வைத்து வலிமை படத்திற்கான கதையை உருவாக்கினேன் காவல் துணை ஆணையர் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார் .
ஆக்ஷன் கலந்த கமர்சியல் கதை தான் வலிமை அஜித்தின் அம்மாவாக சுமித்ராவும் அவருடன் இணைந்து துப்பறிவாளன் ஹூமா குரேஷியும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள் படத்தில் இடம்பெறும் ஆக்சன் காட்சிகள் சேசிங் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும் முக்கியமான ஒரு சேஸிங் காட்சியை படமெடுக்க நீளமாக பெரிய சாலை தேவைப்பட்டது ஆந்திரா லக்னோ டில்லி உட்பட பல இடங்களில் அந்த இடத்தை தேடினோம் எதுவும் செட் ஆகவில்லை கடைசியில் சென்னை அருகிலேயே எடுத்தோம்.
அதேபோல் முக்கியமான சேஸிங் காட்சிகளை ரஷ்யாவில் படமாக்கினோம் ரஷ்யாவில் திறமையான பைக் ரேசிங் மற்றும் பைக் சாகச வீரர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தொழில் முறையில் சிறப்பாக செய்தாலும் ஆச்சரியப்படும் வகையில் பைக் ரேஸ் காட்சிகள் கலக்கியிருக்கிறார் ரசிகர்கள் அஜித் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும் அஜீத்தின் பைக் திறமையை பார்த்து ரசிய பைக் சாகச வீரர்கள் வியந்தனர்.
அஜித் அடிப்படையில் பைக் காதலன் பல பந்தயங்களில் பங்கு பெற்றவர். அடிப்படையில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ரேஸில் கலந்து கொள்வது போலவே நடித்துக் கொடுத்தார் நான் இயக்கிய படங்களில் வலிமை அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ளது திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடித்தோம். கரோனா காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போய்விட்டது.
சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் தீவிரமாக இயங்குகிறார்கள் படம் தாமதமாக வருகிறது என சிலர் நினைக்கிறார்கள் அது குறித்து விவாதங்கள் நடக்கின்றன நான் எழுதி எதிலும் கவனம் செலுத்துவதில்லை நான் எந்த சமூக வலைத் தளத்திலும் இல்லை என்னை பொருத்தவரை வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதற்காக உதைக்கிறேன் வலிமை எங்கள் குழுவின் வலிமையை கூறும்." இவ்வாறு அவர் 4தமிழ் மீடியாவுக்கு பேட்டியளித்தார்.
4தமிழ் மிடியாவுக்காக மாதுமை.