free website hit counter

அருண் விஜய் மகனுடன் நடித்துள்ள ‘ஓ மை டாக்’!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'ஓ மை டாக்'
படத்தின் ஸ்னீக் பிக் வெளியானது. 2டி நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இதில் இளம் அறிமுக நடிகர் அர்னவ் விஜய், அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தைப் பற்றி நடிகர் அருண் விஜய் பேசுகையில், ''டீஸரில் பார்த்ததைப் போல் இந்த திரைப்படம் ஒரு சிறு குழந்தைக்கும், அவரது செல்ல நாயான சிம்பாவுக்கும் இடையே தனித்துவமான நட்பு மற்றும் அழகான - வேடிக்கையான தருணங்களைக் காண்பிக்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை முதன்முதலாக கேட்டபோது, இது வித்தியாசமான திரைக்கதை என்பதை நான் உணர்ந்தேன். இந்தத் திரைக்கதையில் ஏராளமான உணர்வுகள் இடம்பெற்றிருந்தன. பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்காமல், செல்லப்பிராணிக்கு, குழந்தைக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது. தந்தையும், மகனும் திரைக்கதையில் அழகாக பிணைக்கப்பட்டு இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்து குழந்தைகளும் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு முழுநீள குழந்தைகள் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய மகன் அர்னவ் நடித்தது மிகவும் அதிர்ஷ்டம் என்றே நான் நம்புகிறேன்.'' என்றார்.

ஒவ்வொரு குழந்தைகளும், செல்ல பிராணி மீது அன்பு கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பாக 'ஓ மை டாக்' உருவாகி இருக்கிறது. அர்ஜுன் மற்றும் அவரது நாய்க்குட்டி சிம்பாவை பற்றிய இதயத்தை வருடும் கதை. ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் விரும்பி பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படம் இது. குழந்தைகள் மற்றும் அவர்களின் விருப்பத்திற்குரிய செல்லப்பிராணிகளின் உலகத்தில்.. அவர்களின் ஆசைகள், முன்னுரிமை, அக்கறை, துணிச்சல், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற அன்பு, விஸ்வாசம் ஆகியவை குறித்து இந்த திரைப்படம் ஆராய்கிறது.

'ஓ மை டாக்' படத்தை ஜோதிகாவும் சூர்யாவும் தயாரித்துள்ளனர். ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் எஸ் ஆர் ரமேஷ் பாபு ஆகியோர் ஆர். பி டாக்கீஸ் சார்பாக இணைந்து பணியாற்றியுள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula