தரமான திரைப்படங்களை இந்திய ரசிகர்களுக்குத் தருவதில் முன்னணியில் இருந்துவரும் பிராந்திய மொழி சினிமா என்றால் அது மலையாள சினிமாதான்.
தற்போது கேரளத்தின் கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பத்தனம் திட்டா மாவட்டங்கள் கடும் மழைப்பொழிவு காரணமாக, வெள்ளம், நிலச்சரிவு ஆகிய இயற்கைச் சீற்றப் பாதிப்புகளில் சிக்கியுள்ளன. இப்படிப்பட்ட நிலையிலும் நடப்பு 2021 ஆண்டுக்கான மாநில அரசின் விருதுகள் பெற்ற படங்கள் மற்றும் கலைஞர்களை அறிவித்திருக்கிறார்கள்.
2021- ஆண்டுக்கான விருதுகளுக்காக செப்டம்பர் 30- ஆம் தேதி வரை வெளியான சுமார் 80 படங்கள் போட்டியிட்டுள்ளன. விருதுகள் குழுவின் தலைவராக தமிழ்நாட்டிலிருந்து சென்றிருந்த சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார்.
விருது பெற்ற திரைப்படங்களின் முழு பட்டியல் :
சிறந்த நடிகர் : ஜெயசூர்யா (வெள்ளம்)
சிறந்த நடிகை : அன்னா பென் (கப்பேலா)
சிறந்த திரைப்படம் : தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி)
சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம் : அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் சச்சி)
சிறந்த இயக்குநர் : சித்தார்த் சிவா (என்னிவர்)
சிறந்த கதாசிரியர் : ஜியோ பேபி
சிறந்த அறிமுக இயக்குநர் : முகம்மத் முஸ்தஃப (கப்பேலா)
சிறந்த படத்தொகுப்பாளர்: மகேஷ் நாராயணன் (சி யூ ஸூன்)
சிறந்த இசையமைப்பாளர்: எம்.ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதையும்)
சிறந்த பாடகர் : ஷபாஸ் அமான்
சிறந்த பாடகி : நித்யா மம்மென்
சிறந்த பாடலாசிரியர் : அன்வர் அலி
சிறந்த கலை இயக்குநர் : சந்தோஷ் ஜான்
சிறந்த பின்னணிக் குரல் / டப்பிங் கலைஞர்கள் : ஷோபி திலகன், ரியா சாய்ரா
பெண்களுக்கான விசேஷ விருது, திருநங்கை பிரிவு : நான்ஜியம்மா