free website hit counter

ஜப்பானியர்களுக்கு கார்த்தியைப் பிடிக்குமா?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம்

வெளியானது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படமும் திரையரங்குகளில் வெளியானது. பிகில் வெற்றிக்கு இணையாக 100 கோடி ரூபாய் வசூல் சாதனையும் செய்தது. அதேபோல, விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருந்த இந்தப் படம், சிறையிலிருந்து விடுதலையாகும் கார்த்தி, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரிகளை‌ எப்படி காப்பாற்றினார் என்பதையும்,போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போக வரும் வில்லன் கும்பல் பற்றியும், ஒரு‌ கான்ஸ்டபிள் ஐந்து கல்லூரி மாணவர்களை கதாபாத்திரங்களாக வைத்துகொண்டு, அந்த இரவை அவர்கள் எப்படி கடந்து வந்தார்கள் என்பதை விறுவிறுப்பாகச் சித்தரித்தது. அதேபோல ஆதரவற்றோர் விடுதியில் தங்கி இருக்கும் தன்னுடைய மகளைப் பார்க்க வரும்‌ முன்னாள் கைதியான கார்த்திக்கும் பற்றியும், அவருடைய மகளுக்கும் இடையிலான உரையாடல் காட்சிகள் நெகிழ்ச்சிகரமாக உருவாக்கப்பட்டு இருந்தன. கைதியின் வெற்றியைத் தொடர்ந்தே விஜய்யின் மாஸ்டர் படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ். தற்போது உலக நாயகன் கமல்ஹாசனைக் கொண்டு விக்ரம் படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஜப்பானிய மொழியில் கைதி திரைப்படம் 'கைதி டில்லி' என்ற பெயரில், வரும் நவம்பர் 19, 2021 அன்று ஜப்பானில் திரையிடப்படவுள்ளது. ஹிரோஷிமா நகரில் உள்ள திரையரங்கில் இதற்கான வினையல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில், ரஜினிக்குப் பிறகு கார்த்தியின் படம் முதல் முறையாக ரிலீஸ் ஆகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula