free website hit counter

தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைய விருப்பம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசிய விருது நடிகரான தனுஷும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்

மூத்த மகளான ஐஸ்வர்யாவும்  கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் கடந்தவாரம் இவர்கள்  18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையிலிருந்து விடுபட்டு  இருவரும் மனமொத்து பிரிய இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். வழக்கமாக பிரபலங்கள் விவாகரத்து குறித்து அறிவித்தால் உடனே சமூக வலைதள பக்கங்களில் இருந்து கணவர் அல்லது மனைவி பெயரை நீக்கிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐஸ்வர்யாவோ இன்னும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயருடனே தொடர்கிறார்.

இதற்கிடையே ஐஸ்வர்யாவும், தனுஷும் முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தனுஷையும், ஐஸ்வர்யாவையும் மீண்டும் சேர்த்து வைக்க குடும்பத்தாரும், நண்பர்களும் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். யார் என்ன செய்தாலும் சரி என் மகளும்,  மருமகன் தனுஷும் மீண்டும் சேர்ந்தால் போதும் என்கிற நிலைமையில் இருக்கிறாராம் ரஜினிகாந்த். கஸ்தூரி ராஜாவும் அவ்வாறே முயற்சித்து வருகிறார். திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இருவருக்கும் கவுண்சிலிங் அளித்து வருகிறார்கள் ரஜினி குடும்ப வட்டாரத்திலிருந்து தகவல் வருகிறது. இதையடுத்து தனுஷும் ஐஸ்வர்யாவும் ரஜினி வீட்டில் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: