‘வின்னைத் தாண்டி வருவாயா’ திரைப்பட இயக்குநராகவே நடித்திருந்த கே.எஸ்.ரவிகுமாருக்கு
எம்.கே.எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பிரையன் பி. ஜார்ஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜனனி ஐயருடன் ராஜாஜி, பாலசரவணன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைக்கலாஜிகல் திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இதன் கதை களம் முழுவதும் உளவியல் அணுகுமுறை ஒன்றை உத்தியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவரின் மனதில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்கும் முதன்மைக் கதாபாத்திரமாக மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சவாலான கதாபாத்திரத்தை ஜனனி ஐயர் ஏற்று நடித்துள்ளார். டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் பிரையன் பி. ஜார்ஜ் பேசும்போது: “இப்படத்தின் தயாரிப்பாளர் 40 நிமிடத்தில் இப்படத்தின் கதையை கேட்டு ஓகே சொன்னார். கோடம்பாக்கத்தில் அது அவ்வளவு எளிதாக நடக்காது. அதற்காக மதன் சாருக்கு நன்றி. ஜனனி ஐயர் தமிழ் பேசும் நாயகி வேண்டுமென தான் அவரை நடிக்க வைத்தேன். ஒரு நாளில் நான்கைந்து காட்சியெல்லாம் நடித்தார். அட்டகாசமாக நடித்தார். நரேன் சாரிடம் எனக்காக நடியுங்கள் என்றேன், உனக்காக நடிக்கிறேன் என நடித்து தந்தார். கதையையும் நடிகர்களின் தரமான நடிப்பையும் சிறந்த இசையையும் நம்பி வந்திருக்கும் இந்தப் படத்துக்கு உங்கள் ஆதரவு தேவை என்றார்.
கதையின் நாயகி ஜனனி ஐயர் பேசும்போது: “பிரையன் பி. ஜார்ஜை ‘தெகிடி’ படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரையாவது நாயகியாக போட்டால் சண்டை போடுவேன் என்றேன். ஆனால் உண்மையிலேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்தக் கதைக்கு உங்கள் கண்களும் முகச்சாயலும் அவசியம். உங்கள் முகம் உளவியல் பிரதிபலிப்பு கொண்டது என்றார். இந்தக்கதையே வித்தியாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது. ஒரு நாள் 5 காட்சி எடுக்க வேண்டும் ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சி நடப்பதுபோல் சூழ்நிலையை மாற்றி எடுத்தோம். ஆனால், அந்த ஐந்து காட்சிகளுக்கு கண்டினியூட்டி உண்டு. எனவே ஐந்து காட்சிகளும் முடியும்வரை மழை நிற்கக் கூடாது. மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என பிரார்த்தனை செய்தேன். மேஜிக்காக கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அது பேய் மழையாகவும் அடித்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும்.” என்று பேசி அசத்தினார்.