பாகுபலி திரைப்படம்தமிழ்நாட்டில் 350 கோடி வசூல் செய்ததைப் போல, கே.ஜி.எஃப் தமிழ் டப்பிங் திரைப்படம்தமிழ்நாட்டில் மட்டுமே 165 கோடி வசூல் செய்தது.
அந்தப் படத்தின் நாயகன் யாஷ், கன்னடத்திரையுலகில் பணியாற்றும் மூவாயிரம் சினிமா தொழிலாளர்களுக்குத் தலா 5000 ரூபாய் நிதியுதவிவழங்கியிருக்கிறார். இது குறித்து கன்னடத் திரையுலகில் உள்ள முன்னணிநட்சத்திரங்கள் யாரும் வாய் திறக்கவில்லை. பாராட்டவும் இல்லை. ஆனால், யாஷின் இந்த உதவி இந்தியஅளவிலான பேச்சாக அமைந்துவிட்டது.
சில குறும்புக்கார நெட்டிசன்கள் சூர்யா,கார்த்தி, ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய் ரசிகர்கள் குழுக்கள் ஆகியோரை டேக்செய்து, ‘தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யாஉள்ளிட்டவர்கள் இப்படிப்பட்ட உதவியைச் செய்வார்களா?’ எனக் கேட்டு ரணகளம் செய்துவருகிறார்கள்.
இது தொடர்புடைய ரசிகர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை உருக்க.. இதைக்கொஞ்சம் தாமதமாக கண்ட யாஷ், ‘என் உதவியை வைத்து வேறு யாரையும் விமர்சிக்காதீர்கள்.மீறி விமர்ப்பவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்’ என ஒரேபோடாகப்போட.. இதை அஜித், விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.