தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் மதன் பாப் காலமானார்.
தனக்கென ஒரு பாணியில் சிரிப்பை நடிப்பாக்கி, அதனையே தனது அடையாளமாக்கிக் கொண்ட மதன்பாப்பிற்கு வயது 71.மதன் பாபின் மதன் பாபின் இயற்பெயர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.
பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாள 'அசத்தப் போவது யாரு?’ நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும், நல்ல இசைக்கலைஞராகவும் இருந்த மதன்பாப், புற்றுநோயால் பாதிப்புற்றிருந்ததாகவும், சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாகத் தெரிய வருகிறது.