சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்திவரும் பல கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
தேர்தல் அரசியலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் திரையுலகப் பிரபலங்களுடனும் அவர்களுடைய படைப்புகளுடனும் மோதுவதன் மூலம், தங்கள் அரசியலை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்று நம்புகிறார்கள். கடந்த 8 நாட்களாக சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை அவலாக வைத்துகொண்டு நடிகர் சூர்யாவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், தற்போது #WeStandWithSuriya என தேசமே சூர்யாவின் பக்கம் நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது தேசிய அளவில் ட்விட்டர் தளத்தில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது.
இதற்கிடையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையான பிலிம் சேம்பர் ஆஃப் சென்னை சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுள்ளது. இது போன்ற அரசியல் விவகாரங்களில் பிலிம் சேம்பர் எப்போதுமே தலையிட்டதில்லை. ஆனால் முதல்முறையாக சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கைவிட்டுள்ளது. இதன் பின்னர் பொதுவெளியில் சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் திடீரென்று அதிகரித்தனர். ’ஜெய்பீம்’ திரைப்படத்துக்கான தலைப்பை தானம் செய்திருந்த இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோரும் இந்த சூர்யாவுகு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதோ பிலிம் சேம்பர் வெளியிட்டிருக்கும் அறிக்கை :