ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகின.
இதையடுத்து ஆர்த்தி தனது குழந்தைகளின் நலனுக்காக மௌனம் கலைத்து அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மௌனத்தை கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக, கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன், இதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சை விட
என்குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம் எனக்கருதியதால் தான் அந்த விரதம் எனவும் கூறியுள்ளார்.
இன்று நான் ஒரு மனைவியாகவோ, அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை... தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன் எனவும் நான் இதை செய்ய தவறினால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும், இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக்கொள்ளலாம், உங்கள்
பெயரை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் உண்மையை மாற்ற முடியாது, அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு என்றும் ஆர்த்தி கூறியுள்ளார்.
எங்களை உற்றுப் பார்ப்பவர்களுக்கும், எங்களின் நலன் விரும்பிகள் என்று அடையாளம் காட்டிக்கொள்பவர்களுக்கும் ஒன்று, இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்திரவி என்ற பெயரில் தான் உள்ளது, சட்டம் முடிவு செய்யும் வரை அது அப்பெயரிலேயே நீடிக்கும், அன்புள்ள ஊடகவியலாளர்களுக்கு என்னை நீங்கள் அவரது முன்னாள் மனைவி
என்று அடையாளப்படுத்த வேண்டாம் எனவும் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
அந்த முடிவை சட்டம் எடுக்கும் வரை அமைதி காப்போம். இப்பொழுதும் பழிவாங்கவோ பரபரப்புக்காகவோ நான்பேசவில்லை என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவே போராடுகிறேன், இன்றும் உங்களை அப்பா என்று அழைக்கும் அந்த இருமகன்களுக்காக என்கண்ணீரை, கதறல்களை, கசப்பான அனுபவங்களை மறைத்துக்கொண்டு போல மேலும் மேலும் உயர்ந்துஎழுகிறேன் என ஆர்த்தி பதிவிட்டுள்ளார்.