உலக சர்வதேச தமிழ் திரைப்பட சங்கத்தின் வீட்ஃபா முதலாவது சர்வதேச மாநாடு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்று உரையாற்றினர்.நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், காப்புரிமை விவகாரத்தில் உலக விதிகளை கடைபிடிக்கிறோம் என தெரிவித்தார்.
எங்கள் பாடல்களை போட்டதும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அதற்கான கூலி எங்களுக்கு கிடைப்பதுதானே சரி? என்றும் எங்களுடைய சொத்தை எப்படி திருடலாம்? எனவும் கங்கை அமரன் கேள்வி எழுப்பினார். தங்களுக்கு பணத்தாசை இல்லை என குறிப்பிட்ட கங்கை அமரன், அனுமதி கேட்டிருந்தால் இலவசமாக கொடுத்திருப்போம் என தெரிவித்தார்.