மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 20 நாட்களில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் ‘மன்மத லீலை’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படம் ஏப்ரல் 1-ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்தப்
படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார். இதில் சமந்தாவின் முன்னாள் கணவர் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில், அந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் மிரட்டி இருந்தார். இதற்கிடையில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
																						
     
     
    