free website hit counter

சிம்பு - ரஜினி படங்களின் டாப் சீக்ரெட் - திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாநாடு வெற்றிவிழா பத்திரிகையாளர் சந்திப்புக்கு படத்தின் நாயகன் சிம்புவுக்கு முறைப்படி அழைப்புக் கொடுத்து அவரும் வருவதாகத்தான் சொல்லியிருக்கிறார்.

அச்சூழலில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை போனில் அழைத்த சிம்புவின் தரப்பினர் ‘நம்ம மாநாடு படம் 108 கோடி வாசுல் செஞ்சு சாதனை’-யை ஒட்டி சக்சஸ் மீட் என்று விளம்பரம் கொடுத்துடுங்க.. இதை சிம்புவின் அம்மா இதை விரும்பறாங்க’ என்று வாசு என்பர் பேசியுள்ளார். இவர் சிம்புவின் உறவினர் ஆவார்.

அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘அதெப்படி? உண்மையாக 62 கோடி தமிழ்நாடு முழுக்க வசூல் ஆகியுள்ளது. வேணுமுன்னா கேரளா அது.. இதுன்னு 70 கோடி வரைக்கும் தான் கலெக்ட் ஆகி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இப்படி பொய்யா எப்படி 108 கோடின்னு சொல்ல முடியும் என்று பேசிக்கிட்டிருக்கும் போதே வாட்ஸ் அப்பில் ஒரு போட்டோ வந்துள்ளது. அதில் 108 கோடியை கடந்து செல்லும் சிம்புவின் மாநாடுங்கற வாசகத்தோடு போஸ்டர் ரெடி பண்ணி அனுப்பி இருக்கார் வாசு.

அந்த போஸ்டரை தினசரிப் பத்திரிகை ஒன்றில் உங்க சார்பாக விளம்பரமா குடுங்க.. அப்படிக் குடுத்தா சிம்பு பங்க்‌ஷனுக்கு வருவார் இல்லேன்னா போக வேணாமுன்னு சிம்பு பேரண்ட்ஸ் சொல்லிட்டாங்க என்று கூறியுள்ளார். இதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுக்கு போன் போட்டு ‘இப்படி எல்லாம் விளம்பரம் குடுத்து வருமானவரிச் சிக்கல்லே மாட்ட நான் தயாரா இல்லே.. பங்க்‌ஷன் நாளைக்கு நடக்கும்.. முடிஞ்சா வாங்க’ என்று சொல்லி விட்டாராம். தயாரிப்பாளர் இவ்வளவு கறாராக இருந்ததால் சிம்பு மாநாடு வெற்றி விழாவுக்கு கல்தா கொடுத்துள்ளார்.

இதுவொருபக்கம் இருக்க.. நேற்று தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டம் நடந்துள்ளது. அதுலே பேசிய தலைவர்களில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியம்,, ‘ ஒவ்வொரு படத்தையும் ஆளாளுக்கு இம்புட்டு கோடு வசூல்னு பொய் சொல்லி இண்டஸ்ட்ரியை டேமேஜ் பண்ணிக்கிட்டிருக்காங்க.. அதுக்கு மாநாடு, அண்ணாத்த படம் இரண்டும் உதாராணம். மாநாடு தமிழ் நாடு முழுக்க இதுவரைக்கும் தியேட்டேரிக்க வசூல்ல 65 கோடியைத் தாண்டியிருக்கு. அண்ணாத்தா 76 கோடியை தாண்டியிருக்கு. உண்மை அப்படியிருக்க 100 கோடி என்று பேசிகிட்டு இருக்காங்க. கவர்மெண்ட் நாம சரியாக கேளிக்கை வரி கட்டுறதில்லன்னு நம்ம மேல கோபம் காட்டுவாங்க. அதுனாலே இனிமே மாசா மாசம் தமிழ்நாட்டுலே ரிலீஸாகும் படங்களின் ஒரிஜினல் கலெக்‌ன் விபரத்தை பக்காவா வெளியிடுவோம்..

அப்படி செஞ்சாதான் சில பல நடிகர்களின் பொய் சாயம் வெளுக்கும்..சினிமா நல்ல இருக்கணுமுன்னா இதை கண்டிப்பா செஞ்சுதான் ஆகணும்’என்று பேசியதை பலரும் ஒப்புக் கொண்டார்களாம். அதன்படி இன்னும் ஒரு வாரத்தில் இந்த டிசம்பர் முடிந்ததும் இந்தாண்டு கோலிவுட் ரிலீஸ் படங்களின் ஒரிஜினல் கலெக்சன் ரிப்போர்ட் வெளியாகுமாம். இப்படி உண்மையாகவே அவர்கள் வெளியிட முன்வந்தால், பல மாஸ் ஹீரோக்களின் நிலை புஸ்தான்!

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula