free website hit counter

‘வலிமை’படத்தின் கதை இதுதான் : சாத்தான்களின் அடிமைகள்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹாலிவுட் படங்களுக்குத்தான் ‘கிளிம்பஸ்’ காட்சிகள் வெளியிடும் வழக்கம் இருந்து வருகிறது.

அது என்ன ‘கிளிம்பஸ்’? தொடக்கமும் முடிவும் இல்லாமல், ஒரு ஒழுங்கில் இல்லாமல் ‘ரேண்டம்’ காட்சிகளை அடுக்கி 1 நிமிடத்துக்கு வெளியிடுவார்கள். இதைத் தமிழில் முதல் முறையாக முயற்சித்துள்ளார் ‘வலிமை’ படத்தின் இயக்குநர் எச்.வினோத்.

வலிமை கிளிம்பஸ் காட்சிகளில் ‘சாத்தான்களின் அடிமைகள்’ என்றொரு வாசகம் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி வலிமை இயக்குநர் வட்டாரத்தில் துலாவியபோது நமக்குக் கிடைத்த தகவல் ‘வலிமை’ படத்தின் கதையையும் லீக் செய்து விட்டது.

அதாவது, 1967-ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட பைக் கிளப்பின் பெயர்‘சாத்தான் ஸ்லேவ்ஸ்’. இதை உருவாக்கியவர்களும் உருவாக்கியவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்களும் ஹிட்லரின் படையில் தனிப்பிரிவாக இயங்கினார்கள். 54 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் உருவான இந்த பைக் கிளப் சட்டத்துக்கு விரோதமாக, இன்றைக்கும் தலைமறைவாக செயல்பட்டு வருகிறது. மேலும் உலகம் முழுவதும் கிளை பரப்பியும் இருக்கின்றனர்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம்; ஜார்ஜ் ரிச்சி என்பவனைத் தலைவனாகக் கொண்டு தற்போதும் இயங்கிவரும் ‘சாத்தான் ஸ்லேவ்’ பைக் கிளப், ஆள் கடத்தல், கூலிக் கொலைகள், பாலியல் வன்முறை, பொதைபொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெட்டி என்னும் பெண், தனக்கு ஆறு வயதாக இருக்கும்போது ஜார்ஜ் ரிச்சியால் எவ்வளவு பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்தேன் என்பதை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இது ஒரு துளிதான். சாத்தானின் அடிமைகள், அதாவது ஹிட்லரின் அடிமைகளான இவர்கள், நாஜி படையால் பயிற்சி பெற்றவர்கள். இந்தக் குழுக்களில் சேர்ந்து குற்றச் செயல்களில் சிக்கிய நூற்றுக்கணக்கான பைக்கர்கள் மீது வழக்குகள் நடந்து 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை அனுபவித்து வருகின்றனர். இது தொடர்கதையாகி வருகிறது.

லெதர் ஜாக்கெட், அதில் டேஞ்சர், மண்டை ஓட்டுப் படம் போட்டு ‘எம்.சி’ என எழுதியிருப்பதுதான் இவர்களுடைய அடையாளம். ‘சாத்தான் ஸ்லேவ்ஸ்’ குழுவின் பாதிப்பில் உலகம் முழுவதும் ‘தி ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்’, ‘மங்கோல்ஸ்’, ‘ரிபெல்ஸ்’, ‘அவுட்லாஸ் எம்.சி’ என பல பைக்கர் குழுக்கள் இயங்கி வந்தாலும் இவற்றில் பலவும் வழக்குகளில் சிக்கியிருக்கின்றன.

வலிமை படத்தில் இதுபோன்ற ஒரு பைக்கர் குழுவின் தலைவனான கார்த்திகேயாவுக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்கரான அஜித்துக்கும் நடக்கும் யுத்தம்தான் கதை. இந்தியா, ரஷ்யா தொடங்கி அங்கிருந்து காஷ்மீர் வரை என கதை நடப்பதாக படக்குழு வட்டாரம் சொல்கிறது. ஆக வலிமை அஜித் நாஜிக்கலால் உருவாக்கப்பட்ட பைக்கர் குழுக்களின் தொடர்ச்சியை அழிக்கத்துணியும் ஒரு ஸ்பார்ட்ஸ் பைக்கரின் கதை என தகவல் கசிந்துள்ளது.

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula