ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு. அம்பேத்கர் மற்றும் பெரியார்
காட்டிய வழியில் இவர் வழங்கிய தீர்ப்புகள் இன்றைக்கும் பேசப்படுபவை. சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் நீதிபதியாக இருந்த காலத்தில் 90000 வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியவர். சமூகச் சிந்தனையும் அக்கறையும் கொண்டு இயங்குபவர். அதுமட்டுமல்ல, நீதிமன்றங்களில் ‘மை லார்டு’ என்று விளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டவர். கடந்த 2014-இல் ஒய்வு பெற்ற சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்த வி.கே. தாஹில் ரமானியை மேகாலயாவின் உயர்நீதி மன்றத்திற்கு மோடி அரசு மாற்றம் செய்ததை ‘பதவியிரக்கம்’ என்று விமர்சித்தார்.
இதனால், சந்துருவின் ஓய்வுக்குப் பின்னரான பணிக்கொடைத் தொகையை வழங்காமல் ஒன்றிய அரசு இழுத்தடுத்து வந்தது. அதுபற்றிக் கவலைப்படாமல் தொடந்து சமூக நீதிக்காகவும் நீதித்துறையில் மோடி அரசின் தலையீடு குறித்தும் கடுமையாக விமர்சித்து வரும் இவர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ‘ ஜெய் பீம்’ படத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நடித்துள்ளார். சூர்யாவின் அப்பாவான நடிகர் சிவகுமாரின் நண்பர்தான் முன்னாள் நீதிபதி சந்துரு. சிவகுமாரின் அழைப்பின் பேரில்தான் ஜெய் பீம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் நீதிபதி சந்துரு.