லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி 2’ படம் படுதோல்வி அடைந்தது. அத்துடன் லிங்குசாமி தனது பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாரித்த 3 படங்கள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன.
இதற்கிடையில் இந்தப் படங்களை மீட்டு ஓடிடிக்கு விற்க அவர் பேச்சுவார்த்தை செய்து வருகிறார். இதற்காக தெலுங்குக் கதாநாயகன் ஒருவரை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்க இருகிறார். தெலுங்கில் 18 திரைப்படங்களில் நடித்துள்ள ராம் பொத்தினேனி என்பவரைத்தான் அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க தற்போது ஆள்தேடி வருகிறார்கள்.
அதில் கீர்த்தி ஷெட்டியைக் கதாநாயகியாகப் போடுங்கள் என்று கதாநாயகன் ராம் வற்புறுத்த அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம் லிங்குசாமி. ‘உப்பெனா’ என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டிக்குத் தற்போது தெலுங்கில் செம கிரேஸ். அடுத்து, கதையில் அழுத்தமான வில்லன் பாத்திரத்துக்கு யாரைத் தேர்வு செய்வது எனத் தீவிரத் தேடி வருகிறாராம் லிங்குசாமி. அவர் தமிழ் நடிகராக இருந்தால் வியாபாரம் செய்ய நல்லது என நினைக்கிறாராம்.
இதற்காக அருண் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்த அவர் 7 கோடி சம்பளம் கேட்டாராம்.. அய்யா சாமி போதும்டே என்று கும்பிட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அதிர்ஷடம் 35 லட்சம் சம்பளம் கேட்கும் மாஸ்டர் பட அர்ஜுன் தாஸுக்கு போகும்போல் தெரிகிறது. ஆக படம் தமிழ் தெலுங்கு அவியலாக இந்தப் படம் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.