free website hit counter

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுமா? இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்துவோம் என கையில் விளக்கேற்றி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதை திமுக அரசு தடை செய்துள்ளதை கண்டித்து மதுரையில் இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுத சுவாமி முருகன் கோவில் அருகே இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்துவதற்கு தடை விதித்துள்ள திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அனைவரும் கையில் விளக்கை ஏற்றி திமுக அரசிற்கு நல்ல புத்தியை வழங்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்த அனுமதி தர வேண்டுமென்றும் கோஷமிட்டனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, "விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்தால், அந்த தடையை மீறி இந்த ஆண்டு விழாவை நடத்துவோம். இதற்கு முந்தைய ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடைவிதித்த பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசின் நிலைப்பாடு என்னவாயிற்று" என்று கேள்வி எழுப்பினார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: