நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்து விட்டது. கடந்த 8-ந்தேதி நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டமும் நடந்து முடிவடைந்து விட்டது.
150 பேர் பயணம் செய்யும் இந்த கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக 30 பேரும், இலங்கையில் இருந்து நாகைக்கு வருவதற்காக 26 பேரும் டிக்கெட் புக்கிங் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 10-ந்தேதி தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டு 12-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.
இதன்பின்னர் நிர்வாக காரணத்துக்காக மீண்டும் 14-ந்தேதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 முறை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார்.