கலவரத்தின்போது போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் இணையத்தில் வேகமாக பரவின.
இந்நிலையில் மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் கலவரத்தால் தடை செய்யப்பட்ட இணைய சேவை இன்று முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்தியா-மியான்மர் எல்லையில் இருபுறமும் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் இரு நாடுகளுக்குள் 16 கி.மீ. தூரம் செல்ல அனுமதிக்கும் சுதந்திர இயக்க ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, மாநிலத்தில் கலவரத்தின்போது போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் இணையத்தில் வேகமாக பரவின. எனவே அதனை கட்டுப்படுத்த இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது, என்று கூறினார்.