146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான பாலின சமத்துவ இடைவெளி பற்றிய அறிக்கையை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. 146 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் பாலின சமத்துவம் காட்டுவதில் இந்தியா 135வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் அண்டை நாடுகளான வங்காளதேசம் 71-வது இடத்திலும் நேபாளம் 96-வது இடத்தையும் பிடித்துள்ளன. இலங்கை 110-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளன. உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரிவில் இந்தியா 146-வதாக கடைசி இடத்தில் உள்ளது.
உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் வழங்குவதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.