கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்த தொடர்மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 22 பேர் காணாமல் போயியுள்ளனர். இதேவேளை 18 பேர் இதுவரை மழைக்கு பலியாகியுள்ளனர்.
கேரளாவில் தொடர் மழையால் மீட்பு பணிகள் தாமதமாகியுள்ளதுடன் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பிட்ட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய அரசு கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அனித்ஷா தெரிவித்துள்ளார்.