இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துவங்கியது. இதில் 2021 - 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
'அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையும் வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் தி.மு.க அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று நிதி அமைச்சர் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன், பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து இன்று நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசின் 2021 - 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் எந்த திகதியில் தாக்கல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.