இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போது பல்வேறு விடயம் குறித்துப் பேசினார் அதில் :
தமிழ்மொழி மீதான என் அன்பு என்றும் குறையாது என்றும் தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் என்றும் கூறினார். உலகத்தின் பழமையானதும் தொன்மையானதும் மொழியாக திகழும் தமிழ்மொழி இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தண்ணீரை சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.
இதேவேளை கொரோனா தடுப்பூசி குறித்து பேசுகையில் கொரோனா இலவச தடுப்பூசி ஒரே நாளில் 86 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்பாது தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள பல கிராமங்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் இருப்பதால் மக்கள் தடுப்பூசி போடுவதிலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்களை தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் வீரர்களை ஊக்குவிப்போம் எனவும் கூறினார்.