உக்ரைன் மீதான இராணுவ நடவக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கோ போர் வெடித்தது. ரஷ்ய துருப்புக்கள் தலைநகர் பகுதிக்குள் நுழைந்துள்ளதை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் படையினர் உறுதி செய்துள்ளனர்.
ஐரோப்பாவில் ஒரு போரைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி உக்ரைனை இராணுவமயமாக்குவதுதான் என டுமாவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புக்கள் கியேவ் பகுதிக்குள் நுழைந்ததை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்கள் அறிவித்துள்ள நிலையில் கியேவின் புறநகரில் உள்ள ஹோஸ்டோமெல் விமான நிலையத்தைத் தாக்கிக்கொண்டிருந்த மூன்று ரஷ்ய கமோவ் கா-52 போர் ஹெலிகாப்டர்களை உக்ரேனிய விமான எதிர்ப்பு விமானம் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டித்து !
ஒடெசாவில் உள்ள ஒரு தளத்தின் மீது நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் குறைந்தது 18 பேர் இறந்தனர் என்றும், கியேவில் இருந்து வடக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் ரஷ்ய துருப்புக்களுக்கும் உக்ரைன் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே பலத்த மோதல்கள் நடந்து வருகின்றன செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருங்கடலில் உள்ள மூலோபாய உக்ரேனிய துறைமுகமான ஒடெசாவிற்கு அருகில், ஒரு ரஷ்ய தாக்குதல் இராணுவ தளத்தைத் தாக்கியது, குறைந்தது 18 இறப்புகளை ஏற்படுத்தியது (10 பெண்கள் உட்பட). பிராந்திய நிர்வாகம் ஒரு குறிப்பில் தெரிவிக்கிறது. "இப்போது, நாங்கள் இன்னும் இடிபாடுகளில் தோண்டி வருகிறோம்," என்றும் அக் குறிப்புத் தெரிவிக்கிறது.
உக்ரைனில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது - ஐரோப்பியத் தலைவர்கள் பலத்த கண்டனம் !
ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக தங்கள் அத்தியாவசிய பொருட்களுடன், தங்கள் காரில் ஏறி வெளியேறினர். தலைநகரைச் சுற்றி வரும் வழிகளை நிரப்பும் வாகனங்களின் மிக நீண்ட நெடுவரிசைகளைக் படங்கள் காட்டுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள், போலந்து, ருமேனியா மற்றும் மால்டோ நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளார்கள்.