சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட், நேற்று ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில், " கோவிட் சான்றிதழின் தேவை அதன் முடிவை நெருங்கி வருவதாகத் தெரிகிறது" என்று கூறினார்.
இது எப்போது நீக்கப்படும் என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனாலும், சுவிஸ் சுகாதார நிபுணர்களும் தற்போதைய நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தளர்வைக் காண்கிறார்கள்.
தொற்றுநோய் நிபுணர் மார்செல் டேனரின் கூற்றுப்படி, ஓமிக்ரான் அலை அமைதியடைந்த பிறகு, கோடையில் இருந்து கோவிட் சான்றிதழ்கள் மற்றும் முகமூடிகள் போன்ற பொதுவான நடவடிக்கைகள் தேவைப்படாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுவிற்சர்லாந்து திரைப்பட விழாவில் ஈழத்து அகதி முகம் !
அவர் மேலும் குறிப்பிடுகையில், இது வைரஸ் முற்றிலுமாக அழிந்துவிடும் எனும் அர்த்தமாகாது. எப்போதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் இருக்கும் என்றாலும், குறிப்பிட்ட நடவடிக்கைகளால் அவற்றைத் தடுக்க முடியும். எல்லா தொற்றுநோய்களும் இதுவரை இவ்வாறே முடிந்துள்ளன என்று கூறினார்.
இது இவ்வாறிருக்க, சனிக்கிழமை முதல், கோவிட்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மற்றும் நோயிலிருந்து மீண்டவர்கள் வெளிநாட்டிலிருந்து சுவிற்சர்லாந்திற்குள் நுழைய சோதனை முடிவுகளைக் காட்ட வேண்டிய அவசியமில்லை.
சுவிஸ் நாட்டில் பனிச் சறுக்கு விளையாடும் சமந்தா !
தடுப்பூசி போடப்படாத அல்லது குணப்படுத்தப்படாத நபர்கள் மட்டுமே வந்தவுடன் எதிர்மறையான பரிசோதனையை வழங்க வேண்டும். PCR சோதனை கடைசி 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனை கடைசி 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும். இதனால் சுவிற்சர்லாந்திற்கான பயணம் எளிதாகிறது.