சுவிற்சர்லாந்தில் நிச்சயமாக Omicron ன் புதியமாறுபாடான BA.2 உள்ளது. ஒமிக்ரானின் உண்மை வடிவமான BA.1ல் இருந்து திரிபு பெற்ற இந்தப் புதிய மாறுபாடு பல நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது.
"சுவிற்சர்லாந்திலும் BA.2 தெளிவாக வளர்ச்சியடையும் முனைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் அதை இன்னும் அடையாளம் காணவில்லை, ஏனெனில் சுவிற்சர்லாந்தில் அந்தவகையினை அதிகம் வரிசைப்படுத்தவில்லை, " என ஜெனீவா பல்கலைக்கழக உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் அன்டோயின் ஃப்ளாஹால்ட் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் பெப்ரவரி 1ல் கோவிட்-19 கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரலாம் !
"புதிய திரிபு BA.2 முன்னைய திரிபுகளை விட அதிகமாகத் தொற்றக்கூடியதாகத் தோன்றினாலும், வேறுபட்ட நோயியல் சுயவிவரத்தைக் கொண்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மேலும் முந்தைய அனைத்தையும் விட இது குறைவான ஆபத்தானதாக இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் வைரஸின் ஒரு புதிய மாறுபாட்டின் படையெடுப்பைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது" என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வாரம் சுவிற்சர்லாந்து மக்களில் பத்தில் ஒருவர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என சில புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.