சுவிற்சர்லாந்தில், 2020 ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக, தினசரி கொரோனா வைரஸ் தொற்றுக்கள் 1,000 ஐத் தாண்டின. ஆகஸ்ட் 3 செவ்வாயன்று புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 1,059 ஆக அதிகரித்துள்ளது என பொது சுகாதார மத்திய அலுவலகத்தின் புள்ளவிபரங்களில் பதிவாகியுள்ளன.
இந்தத் தொற்றுக்களில் 99.4 சதவிகிதம், டெல்டா மாறுபாட்டில் ஏற்பட்டதாகவும், இந்த மூன்றாவது அலையின் போது, இளையவர்கள் அதிகம் பீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொற்றுக்கள் அதிகரித்த போதிலும், கோவிட் தொடர்பான மருத்துவமனை சேர்க்கைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது மற்றும் சுகாதார வசதிகள் தற்போது நிறைவுறும் அபாயத்தில் இல்லை என்றும் FOPH கூறுகிறது.
தற்போது கோவிட் நோயாளிகளில் பலரும், இளையவர்கள் மற்றும் அதிக எடை கொண்டவர்களாக உள்ளார்கள் எனவும், மூன்றாவது அலையின் போது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் வைக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் முந்தைய இரண்டு வெடிப்புகளை விட இளையவர்கள் அதிகம் என்றும், சுவிஸ் மெடிக்கல் வீக்லியின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்ட சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையின்புதிய ஆய்வின்தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணம்,"தடுப்பூசி போடப்பட்ட முதியவர்கள் நோயின் தீவிர வடிவங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கும் மருத்துவ நிபுணர்கள் மேலும் ஒரு விடுமுறைக்கால அவதானத்தை வெளியிட்டுள்ளார்கள்.
சுவிற்சர்லாந்தின் பெருமுற்றம் மீண்டும் உயிர்க்கிறது !
மத்திய தரைக்கடலில் வெப்ப அலை அதிகரிப்புக் குறித்து, சுவிஸ் சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலில், வரும் நாட்களில் இத்தாலி உட்பட சில பிரபலமான விடுமுறை இடங்களுக்கு "வரலாற்று முக்கியமான வெப்ப அலை" எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வெப்பநிலை உயர்வின் போது, கடற்கரையில் மது அருந்துவது ஒரு மோசமான யோசனை, என்றும், உடல் ஏற்கனவே வெப்பத்தினை வியர்வையால் குறைக்க முயற்சிப்பதன் மூலம் போதுமான அழுத்தத்தில் உள்ள நிலையில் ஆல்கஹால் உடலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல் "கடுமையான வெப்பம் மனநோய் தாக்குதல்களை ஏற்படுத்தும்". ஆதலால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும், சுவிஸ் வெப்பமண்டல மற்றும் பொது சுகாதார நிறுவனத்தினைச் சேர்ந்த நிபுணர் மார்ட்டின் ரோஸ்லி அறிவுறுத்தியுள்ளார்.