ஜேர்மனியில் ஒரேநாளில் 52,000 க்கும் அதிகமான கோவிட் நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வவுவதாகவும், இவர்களில் பெரும்பாலனவர்கள், தடுப்பூசி போடாதவர்களாக உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்கேஐ) இன்று புதன்கிழமை காலை 24 மணி நேரத்திற்குள் 52,826 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்துள்ளது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக அதிகமான எண்ணிக்கையாகும். இதே காலகட்டத்தில், 294 கோவிட் தொடர்பான இறப்புகள் இருந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கிக்னறன. கடந்த ஏழு நாட்களில் 100,000 பேருக்கு 319 கோவிட் நோய்த்தொற்றுகளாக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.