free website hit counter

ரஷ்யா ஒருதலைப்பட்டசமாக குறுகிய கால போர் நிறுத்தத்தை அறிவித்தது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவநடவடிக்கையும், உக்ரைனின் எதிர்ப்பும் என கடந்த மாதம் 24ந் திகிதி ஆரம்பமாகிய யுத்தம் இன்று பத்தாவது நாளாகவும் தொடர்கிறது.

நேற்றைய இரவிலும், கீவ் மற்றும் மரியுபோல் உட்பட பல நகரங்களின் முக்கிய இடங்களைத் தாக்கிய குண்டுவெடிப்புகளும் எறிகணைத்தாக்குதல்களும் தொடர்ந்தன. ரஷயாத் தலைநகர் கியேவ் நோக்கி முன்னேறிய ரஷ்ய இராணுவ அணி, சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உக்ரைன் பமடகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் ரஷ்ய துருப்புக்கள் Zaporizhzhia விலுள்ள ஐரூப்பாவின் மிகப்பெரிய அனுசக்தி நிலையப் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக அனு உலைகள் எதுவும் பாதிப்புக்குள்ளாகவில்லை எனவும், அங்குள்ள ஊழியர்கள் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க மற்றொரு புறமாக, உக்ரைனின்ன இரண்டாவது பெரிய அணுசக்தி மற்றும் மின்சக்தி நிலையம் உள்ள திசையில் முன்னேறி வருகின்றன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

படையெடுப்பு தொடங்கியதில் இருந்து குறைந்தது 39 ரஷ்ய விமானங்களையும் 40 ரஷ்ய ஹெலிகாப்டர்களையும் அழித்ததாக உக்ரைன் தெரிவிக்கிறது. ரஷ்யா 500 ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், உக்ரைனில் 92% படைகளை ஏற்கனவே நிலைநிறுத்தியுள்ளதாகவும் , கியேவ் மற்றும் கார்கிவ் தவிர, ரஷ்ய துருப்புக்கள் இன்னும் தெற்கே முன்னேறி வருகின்றன. கெர்சனைக் கைப்பற்றிய பிறகு அவர்கள் மேற்கு திசையில், ஒடெசாவை நோக்கி நகர்கின்றன. ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகர் தண்ணீர், மின்சாரம் மற்றும் வெப்பம் இல்லாத ஒரு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை போர் நடைபெறும் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காக, ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தம் ஒன்றை ரஷ்யா அறிவித்துள்ளது. இன்று 05.03.22 காலை 10.00 மணிமுதல் இப் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஆயினும் இப் போர் நிறுத்தத்திற்கான கால எல்லை தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. குறைந்தது 5 மணிநேரத்திற்கு இது கடைப்பிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்தப் போர் நிறுத்தம் தொடர்பில் உக்ரைன் உடன்பாடு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்க ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உதவுவதற்காக உக்ரேனிய நாட்டினைச் சேர்ந்த 66,224 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula