free website hit counter

உக்ரைன் யுத்தம் 10 நாட்களில் 1.3 மில்லியன் அகதிகள் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைனில் தொடரும் யுத்தம் காரணமாக கடந்த பத்து நாட்களில், 1.3 மில்லியன் உக்ரேனிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இது அடுத்து வரும் சில நாட்களிலேயே 1.5 மில்லியனைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையில், 800,000 பேரை போலந்தும், ஹங்கேரி சுமார் 14 ஆயிரம் பேரையும் ஏறக்குறைய 200,000 பேர் ருமேனியாவுக்கும், . சுமார் 20,000 பேர் பல்கேரியாவிற்கும் இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைனிலிருந்து சுவிற்சர்லாந்திற்கும் அகதிகள் சிலர் வந்து சேர்ந்துள்ளதாகவும், வரும் வாரங்களில் இவர்களின் வருகை அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் அகதிகளை ஏற்றுக் கொள்ள மாநில அரசுகள் துரிதமாகத் தயாராகி வருகின்றன.

சுவிற்சர்லாந்தில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் குழப்பங்களும் !

இது இவ்வாறிருக்க, உக்ரேனில் கடுமையான யுத்தமும், பாரிய இழப்புக்களும் நிகழ்ந்து வரும் நிலையில், இரு தரப்பும் நாளை திங்கட்கிழமை மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார்கள்.

இதேவேளை ரஷ்யா அதிபரினால் புதிய ஊடகச் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, பல மேற்கத்திய ஒளிபரப்பாளர்கள் செய்தியாளர்கள் மற்றும் செய்தி ஏஜென்சிகள் ரஷ்யாவில் தங்கள் அலுவலகங்களை மூடி, அங்கிருந்து வெளியேறுகின்றனர். CNN, BBC, ARD மற்றும் ZDF, RAI, CBC ஆகிய செய்திச் சேவைகளுடன், சுவிற்சர்லாந்தின் SSR, RSI உட்பட அனைத்து சேவைகளும் அதன் செய்தி நிருபர்களை திரும்பப் பெற்றுள்ளது.

"ரஷ்யா மீது மேற்கத்திய அரசுகள் விதிக்கும் தடைகள் ஒரு போர் அறிவிப்பு போன்றது" என ரஷ்ய அதிபர் புடின் நேற்று அறிவித்திருக்கும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை கடுமையாக்க உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க செய்தி ஊடகம் அறிக்கை செய்த ஒரு தொலைக்காட்சி உரையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, Sberbank ஐ ஸ்விஃப்ட் சர்க்யூட்டில் இருந்து விலக்க வேண்டும், ரஷ்ய கப்பல்களுக்கு ஐரோப்பிய துறைமுகங்களை மூட வேண்டும், மாஸ்கோவின் கிரிப்டோகரன்சிகளுக்கான அணுகலைத் தடுக்க வேண்டும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வெல்லப்பட முடியாத யுத்தமும் விரும்பத் தகாத விளைவுகளும் !

ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு மூலம் பணம் செலுத்துவதும் நிறுத்தப்படுகிறது. வரும் நாட்களில் ரஷ்யாவில் அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக விசா அறிவித்துள்ளது. ரஷ்யாவில் வழங்கப்பட்ட விசா அட்டைகள் மூலம் தொடங்கப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் இனி நாட்டிற்கு வெளியே வேலை செய்யாது, மேலும் ரஷ்யாவிற்கு வெளியே உள்ள நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து விசா அட்டைகளும் இனி ரஷ்ய கூட்டமைப்பிற்குள் வேலை செய்யாது. அதே முடிவை மாஸ்டர்கார்டு எடுத்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula