ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவில் COP26 காலநிலை உச்சிமாநாடு வருகின்ற அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கை மாறாத வரை, உச்சிமாநாடு காலநிலை இலக்குகள் மீது நடவடிக்கை எடுக்காது.
என காலநிலை ஆர்வலர் கிரேட்டா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் மாற்றத்தை கோரும்போது மாற்றம் வரப்போகிறது. எனவே இந்த மாநாடுகளில் எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது," என்று அவர் கூறினார்.
மேலும் க்ளைமேட் லைவ் எனப்படும் காலநிலை மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் உலகளாவிய தொடர் நிகழ்ச்சிகளை சமீபத்தில் தொடங்கிய கிரேட்டா துன்பெர்க் COP26 இல் கலந்து கொள்வதை உறுதிப்படுத்திவருகிறார்.
2015 இல் பாரிஸில் நடந்த முக்கிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடாக COP26 காலநிலை உச்சிமாநாடு அமைகிறது. புவி வெப்பமடைதலை ஏற்படுத்தும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான திட்டங்களை சுமார் 200 நாடுகள் கேட்கின்றன.
இந்நிலையில் அரசியல்வாதிகள் சாக்குப்போக்குகளை கூறி வருவதாகவும் குற்றம் சாட்டி வரும் கிரேட்டா; 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து எடுக்கும் திட்டம் போதுமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் "எனது பார்வையில், மக்கள் இறுதியாக சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்து வருகிறார்கள்; நாம் நெருக்கடியை எதிர்கொள்கிறோம் என்பதையும், பெரிய மாற்றங்கள் தேவைப்படுவதையும், அமைப்பை வேரோடு பிடுங்க வேண்டும் என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்வதே வெற்றியாகும்..ஏனென்றால் அங்குதான் மாற்றம் வரப்போகிறது." எனவும் கிரேட்டா தெரிவித்துள்ளார்.