ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மார்ச் 2024 இல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறுகிறார். இத்தேர்தலின் மூலம் அவர் குறைந்தபட்சம் 2030 வரை அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அரச தலைவர் அல்லது பிரதம மந்திரியாக தனது தொடர்ச்சியான அதிகாரத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புடின், மார்ச் 17, 2024 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் தனது ஐந்தாவது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
மோதலின் போது ரஷ்யாவால் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களில் வசிப்பவர்கள் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஷ்ய ஆதரவு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பிராந்தியங்களின் உள்ளாட்சித் தேர்தல்களை சர்வதேச சமூகம் முன்பு ஒரு ஏமாற்று வேலை என்று கண்டித்தது.