free website hit counter

புதிய சர்வதேச விமானப் பயண விதிகளை அமுல் படுத்தினார் பைடென்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நவம்பர் 8 முதல் அமெரிக்காவுக்குப் பயணிக்கவிருக்கும் சர்வதேசப் பயணிகள் கட்டாயம் முழுமையான தடுப்பூசி செலுத்தப் பட்டிருக்க வேண்டும் என்ற நியதியை அதிபர் பைடென் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்ணயித்துள்ளது.

சர்வதேச பயணிகளுக்கான புதிய விமானப் பயண விதிகள் குறித்த சுருக்கமான விபரம் கீழே :

1. சர்வதேச பயணிகள் தங்களது முழுமையான தடுப்பூசி செலுத்தப் பட்டதற்கான டிஜிட்டல் சான்றிதழுடன் அதற்கு ஒத்த அடையாள அட்டையையும் வைத்திருத்தல் அவசியமாகும்.

2. அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு பிரிவான CDC இன் தகவல் படி FDA இனால் அனுமதிக்கப் பட்ட அல்லது உலக சுகாதாரத் திணைக்களத்தினால் அனுமதிக்கப் பட்ட தடுப்பூசிகளது டிஜிட்டல் சான்றிதழ்களே செல்லுபடியாகும்.

3. இச்சான்றிதழ் இல்லாதவர்கள் குறைந்தது 1 நாளைக்கு முன்பு எடுக்கப் பட்ட கோவிட் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

4. 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தடுப்பூசி சான்று அவசியமில்லை என்றாலும், 2 தொடக்கம் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களாயின் அவர்கள் புறப்பட முன்பு கோவிட் பரிசோதனை எடுத்தல் அவசியமாகும்.

5. தடுப்பூசி போடப்படாத குழந்தை தனியாகவோ அல்லது தடுப்பூசி செலுத்தப் படாத நபர்களுடனோ பயணித்தால், புறப்பட குறைந்த பட்சம் 1 நாளைக்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

6. கோவிட் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டிருப்பவர்கள், வேறு ஏதும் தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களால் தடுப்பூசி போட இயலாதவர்கள், அவசர மனிதாபிமான காரணங்களுக்காகப் பயணிப்பவர்கள் போன்றவர்களுக்கு விலக்கு உண்டு. ஆனால் அவர்கள் அவர்கள் அமெரிக்க அரசினால் அங்கீகரிக்கப் பட்ட கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

7. மத மற்றும் வேறு நம்பிக்கை சார்ந்த காரணங்களுக்காக தடுப்பூசி பெறாதவர்களுக்கு விலக்கு அளிக்கப் படாது என்பது CDC இன் நிலைப்பாடு ஆகும்.

8. தடுப்பூசி செலுத்தப் படும் விகிதம் 10% இற்கும் குறைவான நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் உரிய காரணத்துடனும், கோவிட் பரிசோதனையுடனும் அனுமதிக்கப் படுவர். ஆனால் அவர்கள் குறைந்தது 60 நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

9. தவறான சான்றிதழ்களை சமர்ப்பிப்பவர்கள் கடுமையான தண்டனப் பணத்தை செலுத்தவோ, சிறைத் தண்டனை பெறவோ வாய்ப்புண்டு.

10. அமெரிக்காவின் அனைத்து ஏர்லைன்ஸ் சேவைகளுக்கும் TSA என்ற போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தடுப்பூசிப் பதிவுகளைப் பரிசோதிக்க தேவையான வழிகாட்டலை விரைவில் வழங்கவுள்ளது.

11. நவம்பர் 8 முதல் Contact Tracing என்ற அடையாள முறை மூலம், விமானத்தில் கோவிட் தொற்றுடன் பயணித்தவர் கண்டு பிடிக்கப் பட்டால் அவருடன் பயணித்த அனைவருக்கும் எச்சரிக்கும் வழிகளை அமெரிக்க அரசு கையாளவுள்ளது. இதற்காகப் பயணிகளின் விபரங்களை சேகரித்து 30 நாட்களுக்குப் பின் அழித்து விட CDC உத்தரவிட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula