அமெரிக்காவில் தம்மை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அடையாளப் படுத்திக் கொள்ள இயலாத LGBT வகையைச் சேர்ந்த திருநங்கையருக்கான முதலாவது உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு X என்ற அடையாளத்துடன் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
அடுத்த வருடம் விரிவான உரிமைகளுடன் வெளியிடப் படவுள்ள இந்த கடவுச்சீட்டின் அறிமுகம் திருநங்கையரின் உரிமைகளை அங்கீகரிப்பதில் முக்கிய மைல்கல்லாக கருதப் படுகின்றது.
2015 ஆமாண்டு முதல் கொலராடோவைச் சேர்ந்த திருநங்கையர் ஒருவர் கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் பின் தனது பெயருக்கு வர வேண்டிய கடவுச் சீட்டு அதே பெயருடைய இன்னொருவருக்குத் தவறுதலாக சென்றதை அறிந்த பின் திருநங்கையருக்கென தனி வகை கடவுச்சீட்டு அறிமுகப் படுத்தக் கோரி சட்ட ரீதியாகப் போராடினார். தற்போது இந்த போராட்டத்துக்கு வெற்றி கிட்டியுள்ளது.
உலகில் திருநங்கையினரைத் தனிப்பட்ட பாலினமாக கடவுச்சீட்டில் அங்கீகரித்துள்ள நாடுகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபால் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது.