எதிர்வரும் வாரம் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப் படுகின்றது.
ஆப்கானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அங்கு தோன்றக் கூடிய மிகத் தீவிரமான மனித உரிமை மீறல்கள் அச்சுறுத்தல் தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய திகதியில் பல சர்வதேச நாடுகளின் தீவிரவாதப் பட்டியலில் தலிபான்களின் பெயர் இன்னமும் இருந்து வருகின்றது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இடம்பெறவுள்ள இந்த வருடத்துக்கான முக்கியமான சிறப்புக் கூட்டமான இதற்கு 60 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதில் பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.